சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்

  • SHARE
  • FOLLOW
சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்


ரூட் கெனால் சிகிச்சை தொடர்பான முக்கிய தகவல்களை இப்பதிவின் மூலம் தெறிந்து கொள்ளுங்கள்.

ரூட் கெனால் சிகிச்சை: சொத்தைப்பற்களை அகற்றாமல், நோய் தொற்றை நீக்கவும், வருங்காலத்தில் நுண்ணுயிர் தொற்றுகளிலிருந்து பற்களைக் காப்பாற்றவும் ரூட் கெனால் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பல்லின் மேற்பரப்பில் சொத்தை இருந்தால், அதன் பற்குழி நிரப்பி(filling) சரி செய்யப்படுகிறது. ஆனால் அழுகல் பற்கூழ் வரை பரவும்போது, ​​நிலை மோசமடையலாம். பல் சொத்தையால் ஏற்படும் கடுமையான வலியால், சாப்பிடுவது சிரமமாக இருக்கலாம். காலப்போக்கில் அதிகரிக்கும் இந்தப் பிரச்சனையை, ரூட் கெனால் சிகிச்சையின் உதவியுடன் சரிசெய்யலாம்.

ரூட் கெனால் சிகிச்சை தொடர்பான செயல்முறை, செலவு, முன்னெச்சரிக்கைகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்வோம். இதை பற்றிய சிறந்த தகவலுக்காக, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸின் எம்.டி. மருத்துவர் டாக்டர் சீமா யாதவிடம் பேசினோம்.

ரூட் கெனால் என்றால் என்ன?

ரூட் கெனால் என்பது, பற்களுக்கு இடையில் ஏற்படும் தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகும். அடிப்பட்டு பல் சேதமடைந்தால், பல்லில் இரத்தப்போக்கு அல்லது சொத்தை ஏற்பட்டால் ரூட் கெனால் செய்யப்படுகிறது. இந்த செயல்முறைக்கு, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு அமர்வுகள்வரை எடுக்கலாம். நிறைய பற்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், இன்னும் அதிக நேரம் எடுக்கும். முதல் அமர்வு செயல்முறைக்கு, 30 முதல் 40 நிமிடங்கள்வரை ஆகலாம்.

ரூட் கெனால் சிகிச்சை முறை

  • பல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, மரத்துப்போகும் மருந்துகள் செலுத்தப்படும்.
  • பழுதடைந்த பல்லின் மேல் பகுதியைத் துளையிட்டு, பல்லின் குழல்(canal) திறக்கப்படுகிறது.
  • பல்லில் இருக்கும் கூழ் அல்லது குழி அகற்றப்படுகிறது. பின்னர் மருத்துவர் குழலைச் சுத்தம் செய்வார்.
  • குழல் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் பல் நிரப்புதலின் உதவியுடன், மருத்துவர்கள் அந்த காலி இடத்தை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் நிரப்புகிறார்கள். இது சீல் மற்றும் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • ரூட் கெனால் சிகிச்சைக்குப் பிறகு, ஒரு காப்பு உரை அல்லது கிரௌன்(tooth cap) பொருத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், பல் உடைந்து போகலாம்.

ரூட் கெனால் சிகிச்சைக்குப் பின், தேவையான முன்னெச்சரிக்கைகள்

  1. ரூட் கெனாலுக்கு பிறகு, உலர் பழங்கள், கடினமான பொருட்கள், புளிப்பான பழங்கள், பிஸ்கட் மற்றும் பாக்கு போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.
  2. பல் சுகாதாரம் மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாயில் பாக்டீரியா பரவலை தடுக்க, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்க மறவாதீர்கள்.
  3. வலி, சீழ் வடிதல் அல்லது வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளைக் கண்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
  4. பற்களில் சிக்கிய உணவு, வீக்கம் அல்லது வலியை ஏற்படுத்தும், எனவே இதை நீக்கப் பல்லிடுக்கு நூலை(Dental Floss) பயன்படுத்தலாம்.
  5. சிகிச்சைக்குப் பின், பல்லை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும். இது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

ரூட் கெனால் சிகிச்சைக்கு பின் காப்பு உரை(capping)

ரூட் கெனால் சிகிச்சைக்குப் பிறகு, காப்பு உரை பொருத்த வேண்டியது அவசியம். காப்பு உரை பொருத்த தவறினால் மீண்டும் பல் சிதைவு ஏற்படலாம். மேலும், சிகிச்சைக்கான பலன் நீண்ட காலம் நீடிக்காமல் போகலாம். காப்பு உரை பொருத்தப்படாத சிகிச்சை முழுமையற்றதாகக் கருதப்படுகிறது. பல்லில் பொருத்துவதற்கு ஏற்றக் காப்பு உரை அல்லது கிரௌன்(Tooth Cap) முறையாக வடிவமைக்கப்படும். இதனால் பல்லின் மேல் கச்சிதமாகப் பொருந்தி, பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும். சரியான, பாதுகாப்பான காப்பு உரைபற்றி உங்கள் பல் மருத்துவரிடம் கேளுங்கள்.

ரூட் கெனால் சிகிச்சைக்கான செலவு

அரசு மருத்துவமனையில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும். ரூட் கெனால் சிகிச்சையை, மலிவான விலையில் அரசு மருத்துவமனைகளில் பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை பெற அதிக செலவாகும். மருத்துவமனையைப் பொறுத்து சிகிச்சைக்கான செலவும் மாறுபடும். இங்கு அரசு மருத்துவமனையைவிட பல மடங்கு அதிகமாகச் செலவாகும்.

ரூட் கெனால் சிகிச்சை வலி மிகுந்ததாக இருக்குமா?

ரூட் கெனால் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாற்று மருந்து மற்றும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. அதனால் சிகிச்சையின்போது சுத்தமாக வலி தெரியாது. ஆனால் சிகிச்சைக்குப் பின் மருந்துகளின் தாக்கம் குறையும்பொழுது நீங்கள் வலியை உணரலாம். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான மருந்துகளை உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார். ரூட் கெனாலின்போது, தவறான உணவு உட்கொள்ளல் அல்லது தவறான விளைவு காரணமாக வலி உணரப்படலாம்.

ரூட் கெனால் சிகிச்சையின் பக்க விளைவுகள்

  • சிகிச்சையின்போது, நோய்க்கிருமி பாதித்த இயந்திரம் அல்லது கருவியின் பயன்பாடு, தொற்றுக்கு வழிவகுக்கும் மற்றும் வலியை ஏற்படுத்தும்.
  • ஒரு சிலருக்கு பல்லில் ஏற்படும் தொற்று காரணமாக சீழ்பிடிக்கலாம்.
  • முறையற்ற ரூட் கெனால் சிகிச்சை காரணமாக, பல்லின் வேரில் விரிசல் ஏற்படலாம்.
  • ரூட் கெனால் சிகிச்சைக்குப் பிறகு வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால், பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றங்கள்

முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும், அவர் உங்களுக்கான சரியான மருந்தை வழங்குவார்.
ரூட் கெனால் சிகிச்சைக்குப் பின் சில நாட்களுக்கு மென்மையான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.
கவனமாகப் பல் துலக்கவும். சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல்லைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
ரூட் கெனாலுக்கு பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

ரூட் கெனால் தொடர்பான இந்த தகவல்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். பதிவைப் பகிர மறக்காதீர்கள். பற்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பல் மருத்துவரை அணுகவும்.

images source: freepik

Read Next

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்