Fri Sep 11, 2026 | 11:14 PM IST

Root Canal Treatment: சொத்தப் பல்லுக்கான ரூட் கெனால் சிகிச்சை.. மருத்துவரின் அட்வைஸ் இங்கே..

Root Canal Treatment: சொத்தைப்பற்களை அகற்றாமல், நோய் தொற்றை நீக்கவும், வருங்காலத்தில் நுண்ணுயிர் தொற்றுகளிலிருந்து பற்களைக் காப்பாற்றவும் ரூட் கெனால் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 

ரூட் கெனால் சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது? ரூட் கெனால் சிகிச்சை செய்த பின் அதை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்? இதற்கான செலவு என்ன? இது போன்ற கேள்விகளுக்கான விளக்கத்தை லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸின் எம்.டி. மருத்துவர் டாக்டர் சீமா யாதவ் இங்கே பகிர்ந்துள்ளார். 

ரூட் கெனால் என்றால் என்ன?

ரூட் கெனால் என்பது, பற்களில் ஏற்படும் தொற்றுகளை அகற்றுவதற்காக செய்யப்படும் சிகிச்சையாகும்.  சொத்தை பல், பல் சேதம் மற்றும் ஈருகளில் இரத்த போக்கு ஏற்பட்டால், இந்த சிகிச்சை செய்யப்படும். இந்த செயல்முறைக்கு, குறைந்தது இரண்டு அமர்வுகள்வரை எடுக்கலாம். 

ரூட் கெனால் சிகிச்சை முறை

  • முதலில் பற்களை சுற்றியுள்ள பகுதிகள் மரத்துப்போவதற்காக ஊசி செலுத்தப்படும்.
  • பின்னர் பல்லின் மேல் பகுதி துளையிடப்பட்டு, வேர் திறக்கப்படுகிறது.
  • பல்லில் இருக்கும் கூழ் அல்லது குழி அகற்றப்படுகிறது. பின்னர் மருத்துவர் குழலைச் சுத்தம் செய்வார்.
  • வேர் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் பல் நிரப்புதலின் உதவியுடன், நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் நிரப்பப்படுகிறது. இது சீல் மற்றும் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • ரூட் கெனால் சிகிச்சைக்குப் பிறகு, ஒரு காப்பு உரை அல்லது கிரௌன்(tooth cap) பொருத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், பல் உடைந்து போகலாம்.

ரூட் கெனால் சிகிச்சைக்குப் பின், தேவையான முன்னெச்சரிக்கைகள்

1. ரூட் கெனாலுக்கு பிறகு, உலர் பழங்கள், கடினமான பொருட்கள், புளிப்பான பழங்கள், பிஸ்கட் மற்றும் பாக்கு போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

2. பல் சுகாதாரம் மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். .

3. வலி, சீழ் வடிதல் அல்லது வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளைக் கண்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

4. பற்களில் சிக்கிய உணவு, வீக்கம் அல்லது வலியை ஏற்படுத்தும், எனவே இதை நீக்கப் பல்லிடுக்கு நூலை(Dental Floss) பயன்படுத்தலாம்.

5. சிகிச்சைக்குப் பின், பல்லை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும். இது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

ரூட் கெனால் சிகிச்சைக்கு பின் காப்பு உரை(capping)

ரூட் கெனால் செய்த பிறகு, காப்பு உரை பொருத்த வேண்டியது அவசியம். இல்லையென்றால் சிகிச்சைக்கான பலன் நீண்ட காலம் நீடிக்காமல் போகலாம். காப்பு உரை பொருத்தப்படாத சிகிச்சை முழுமையற்றதாகக் கருதப்படுகிறது.

பல்லில் பொருத்துவதற்கு ஏற்றக் காப்பு உரை அல்லது கிரௌன்(Tooth Cap) முறையாக வடிவமைக்கப்படும். இது குறித்து உங்கள் பல் மருத்துவரிடம் கேளுங்கள்.

ரூட் கெனால் சிகிச்சைக்கான செலவு

அரசு மருத்துவமனையில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை பெற அதிக செலவாகும். மருத்துவமனையைப் பொறுத்து சிகிச்சைக்கான செலவும் மாறுபடும். இங்கு அரசு மருத்துவமனையைவிட பல மடங்கு அதிகமாகச் செலவாகும்.

ரூட் கெனால் சிகிச்சை வலி மிகுந்ததாக இருக்குமா?

ரூட் கெனால் சிகிச்சை பெறுபவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. அதனால் சிகிச்சையின்போது சுத்தமாக வலி தெரியாது. ஆனால் சிகிச்சைக்குப் பின் மருந்துகளின் தாக்கம் குறையும்பொழுது நீங்கள் வலியை உணரலாம். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான மருந்துகளை உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார். மேலும் உணவுகள் உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ரூட் கெனால் சிகிச்சையின் பக்க விளைவுகள்

ரூட் கெனால் சிகிச்சை மேற்கொள்வதில் எந்த தீங்கும் இல்லை. ஆனால் அதை செய்யும் விதத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம். அதாவது, ரூட் கெனால் சிகிச்சை செய்வதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள் சுத்தமாக இல்லாவிட்டால், தொற்று ஏற்படலாம். மேலும் வலி மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

ரூட் கெனால் சிகிச்சைக்குப் பிறகு வலி அல்லது வீக்கம்

  • ரூட் கெனால் செய்த பிறகு வலி ஏற்பட்டால், முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்
  • மென்மையான உணவுகளை சாப்பிடவும்.
  • கவனமாகப் பல் துலக்கவும்.
  • அடிக்கடி பல்லைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • ரூட் கெனாலுக்கு பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

Image Source: Freepik

Read Next

இயந்திரத்தில் முடி சிக்கி பிரிந்து விழுந்த உச்சந்தலை: வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content