நம்ம உடலில் கொழுப்பே இல்லாமல் போகக்கூடாது. ஆனால் LDL (Low Density Lipoprotein) என்று சொல்லப்படும் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால், அது இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு எதிராக HDL (High Density Lipoprotein) என்று சொல்லப்படும் நல்ல கொழுப்பு அதிகமாக இருக்க வேண்டும். இதை எப்படி இயற்கையாகக் கட்டுப்படுத்தலாம்? இதைப் பற்றிதான் மருத்துவர் முபாரக் (Radiologist) பரிந்துரையுடன் பார்க்கலாம்.
உணவில் மாற்றம் (Dietary Modification)
உங்க சாப்பாட்டு பழக்கத்திலேயே அதிக மாற்றம் செய்ய வேண்டும்.
LDL குறைக்கும் உணவுகள்
* அவகாடோ – ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. இது கெட்ட கொழுப்பை குறைக்கும்.
* காய்கறிகள் & பழங்கள் – நார்ச்சத்து நிறைந்ததால் கொழுப்பு உடலில் தேங்காமல் வெளியேறும்.
* நட்ஸ் – பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவை கெட்ட கொழுப்பை குறைக்கும்.
* ஓட்ஸ் & முழு தானியங்கள் – இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம். இதனால் கெட்டு கொழுப்பு குறையும்.
* பீன்ஸ் & பருப்பு வகைகள் – புரதமும் நார்ச்சத்தும் இவற்றில் அதிகம். இது இதயத்திற்கு நல்லது.
HDL அதிகரிக்கும் உணவுகள்
* ஓமேகா-3 நிறைந்த மீன்கள் - சால்மன், மேக்கெரல் போன்ற ஒமேகா-3 கொழுப்பு நிறைந்தது. இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
* டார்க் சாக்லேட் – இது HDL அளவை அதிகரிக்கும்.
* ஆலிவ் எண்ணெய் – இது உடலுக்கு நல்ல கொழுப்பு தரும்.
பூண்டு – HDL அதிகரிக்கவும், LDL குறைக்கவும் இது உதவும்.
தவிர்க்க வேண்டியது
* வறுத்த உணவுகள்
* பாக்கெட் ஸ்நாக்ஸ்
* டிரான்ஸ் உணவுகள்
* அதிக சர்க்கரை
மது & புகைபிடித்தலை நிறுத்துங்கள்
புகைபிடித்தல், மது குடித்தல் ஆகியவை கெட்ட கொழுப்பு (LDL)-ஐ அதிகரிக்கும். இது நேரடியாக இதய நோய், ஸ்ட்ரோக், ரத்தக் குழாய் அடைப்பு அபாயத்தை தூண்டும். உடனே நிறுத்தினால், உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் சில மாதங்களிலேயே தெரிய வரும்.
உடற்பயிற்சி அவசியம்
எல்லாரும் சொல்லுற மாதிரி, Exercise தான் கொழுப்பை கட்டுப்படுத்தும் முக்கிய விசை.
* நடக்கலாம்
* சைக்கிள் ஓட்டலாம்
* ஓடலாம்
* யோகா, ஜாக்கிங் போன்ற எளிய பயிற்சிகளும் செய்யலாம்.
தினமும் குறைந்தது 30 நிமிடம் எதாவது ஒரு வகை உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் LDL குறையும், HDL அதிகரிக்கும்.
View this post on Instagram
இறுதியாக..
உடலிலிருக்கும் கொழுப்பு நல்லது. ஆனால் சமநிலையா இருந்தால்தான் ஆரோக்கியம் பாதுகாப்பாக இருக்கும். நல்ல கொழுப்பு (HDL) அதிகரிக்க, கெட்ட கொழுப்பு (LDL) குறைக்க, மருத்துவர் முபாரக் பரிந்துரைக்கும் உணவு மாற்றம், புகை/மது தவிர்ப்பு, உடற்பயிற்சி – இந்த மூன்றையும் கடைப்பிடித்தாலே, இதய ஆரோக்கியம் 100% பாதுகாப்பாகும்.