Thu Oct 29, 2026 | 10:49 AM IST

Doctor Verified

ஜங்க் உணவு OUT – ப்ரோக்கோலி IN! Fatty Liver-ஐ தடுக்கும் இயற்கை மருந்து இதுதான்!

இன்றைய காலகட்டத்தில் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை. இதுபோன்ற சூழ்நிலையில், ப்ரோக்கோலி சாப்பிடுவது, கொழுப்பு கல்லீரல் பிரச்னைக்கு எவ்வாறு உதவியாக இருக்கும், இதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
ஜங்க் உணவு OUT – ப்ரோக்கோலி IN! Fatty Liver-ஐ தடுக்கும் இயற்கை மருந்து இதுதான்!ஜங்க் உணவு OUT – ப்ரோக்கோலி IN! Fatty Liver-ஐ தடுக்கும் இயற்கை மருந்து இதுதான்!

இன்றைய காலத்தில், கொழுப்பு கல்லீரல் (Fatty Liver Disease) நோய் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகமான எண்ணெய், ஜங்க் உணவுகள், உடற்பயிற்சி குறைவு, நீரிழிவு மற்றும் மன அழுத்தம் ஆகியவை இதற்கு காரணமாகின்றன.

கல்லீரலில் கொழுப்பு அதிகரித்து அதன் செயல்பாடு குறையும் போது, உடலில் நச்சுக்கள் தேங்கத் தொடங்குகிறது. இது நீண்ட காலம் நீடித்தால் கல்லீரல் சேதம், சிரோசிஸ், இதயம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த சூழ்நிலையில், ப்ரோக்கோலி (Broccoli) எனும் காய்கறி, கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இயற்கையான பாதுகாப்பாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் பிரச்னைக்கு ப்ரோக்கோலி எவ்வாறு நன்மை பயக்கிறது என்பது குறித்து, டெல்லி உள்ள, Sri Balaji Action Medical Institute-ன் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜி.எஸ். லம்பா இங்கே விளக்கியுள்ளார்.

artical  - 2025-09-04T205051.813artical - 2025-09-04T205051.813

கொழுப்பு கல்லீரலுக்கு ப்ரோக்கோலியின் நன்மைகள்

1. கல்லீரல் நச்சு நீக்கத்தில் உதவும்

ப்ரோக்கோலியில் உள்ள குளோரோபில், வைட்டமின் C, வைட்டமின் K, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் தேங்கும் நச்சுகளை நீக்க உதவுகின்றன. ப்ரோக்கோலி தொடர்ந்து உட்கொண்டால், கல்லீரல் செல்களின் செயல்பாடு மேம்பட்டு, கல்லீரலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.

2. உடல் வீக்கம் மற்றும் குறைக்கும்

NIH (National Institutes of Health) ஆய்வின்படி, ப்ரோக்கோலியில் அலர்ஜி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள் உள்ளன. இது கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் சேதத்தை குறைத்து, நோயாளி விரைவாக மீள உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fatty Liver.. ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் மறைமுக எதிரி.! மருத்துவர் விளக்கம்..

3. எடை மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

ப்ரோக்கோலி குறைந்த கலோரியுடன் அதிக நார்ச்சத்தைக் கொண்டது. இதனால் எடை அதிகரிப்பை தடுக்கும், இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கிறது. இதுவே கொழுப்பு கல்லீரல் மோசமடைவதை தடுக்க முக்கிய காரணமாகும்.

4. கல்லீரல் பாதுகாப்பு கேடயம்

ப்ரோக்கோலியில் உள்ள Sulforaphane என்ற இயற்கை மூலப்பொருள், கல்லீரல் செல்களை சீராக இயங்க வைக்கும். இதனால் நீண்ட கால கல்லீரல் சேதத்தைத் தடுக்கும் இயற்கையான கேடயம் போல செயல்படுகிறது.

artical  - 2025-08-23T115854.699artical - 2025-08-23T115854.699

ப்ரோக்கோலியை சாப்பிட சிறந்த வழிகள்

* வேகவைத்து சாலட்டாக சாப்பிடலாம்

* சூப் வடிவில் எடுத்துக்கொள்ளலாம்

* காய்கறி வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்

* பல தானிய மாவில் பரோட்டா செய்து சாப்பிடலாம்

* ப்ரோக்கோலி தண்ணீராக குடிக்கலாம்

இறுதிச்சொல்..

கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் தங்கள் உணவில் ப்ரோக்கோலியைச் சேர்ப்பது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழி. இது நோயாளிகளுக்கு நீண்ட கால நன்மை தரும் என்று மருத்துவர் கூறுகிறார்.

{Disclaimer: இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய தகவல்களாகும். இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட எந்தவொரு உடல்நல பிரச்சனையிலும், உணவு முறையில் மாற்றம் செய்யும் முன், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.}

Read Next

→ வறுத்த உணவு வேண்டாம்.. ஆரோக்கியத்தை பாதுகாக்க வேகவைத்த உணவு தான் சரியான தேர்வு.! மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.