
Natural hacks to lower ldl levels at home in winter: குளிர்ந்த காலநிலையானது நமது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இவை நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதில் குறிப்பாக, LDL என்ற குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரம் என்றழைக்கப்படும் கெட்ட கொழுப்பு குளிர்காலத்திலேயே அதிகரித்து காணப்படுகிறது. குளிர்ந்த காலநிலையின் போது குறைந்த உடல் செயல்பாடு மற்றும் அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு காரணமாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது.
இவ்வாறு உடலில் அதிகரிக்கப்படும் கெட்ட கொழுப்பு இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உடலில் உயர் எல்டிஎல் கொழுப்பின் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதன் தீவிர பிரச்சனைகளின் காரணமாக அறுவை சிகிச்சை அல்லது ஆக்கிரமிப்பு நடைமுறைகள் போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, வீட்டிலேயே சில ஆரோக்கியமான முறைகளைக் கையாள்வதன் மூலம் குளிர்காலத்தில் எகிறும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: LDL Cholesterol: உடல் கொழுப்பு அதிகம் இருக்கா? இந்த உணவை தொடவேக் கூடாது!
குளிர்காலத்தில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பது எப்படி?
உடற்பயிற்சி செய்வது
குளிர்ந்த காலநிலையில், வீட்டுக்குள்ளே இருக்கத் தூண்டினாலும், உடலை சுறுசுறுப்பாக வைப்பது அவசியமாகும். வழக்கமான உடல் செயல்பாட்டின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கலாம். அதன் படி, சைக்கிள் ஓட்டுதல், விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கான வழிகளைக் கண்டறிவது போன்றவற்றின் மூலம் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும் அதே வேளையில் வேளையில் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. சிறந்த முடிவுகளைப் பெற, வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
பகுதி அளவில் கவனம் செலுத்துதல்
குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் முழுமை உணர்வுகளை அளிக்கும் உணவுகளின் மீதே அதிக நாட்டம் கொள்வோம். எனினும், இந்த காலகட்டத்தில் பகுதி அளவுகளில் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். ஏனெனில், அதிகப்படியான எல்.டி.எல் கொழுப்பு அளவு நேரடியாக எடை அதிகரிப்புக்கு பங்களிப்பதாகும். குளிர்காலத்தின் போது பகுதி கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்வது, உடலில் உள்ள கலோரி உட்கொள்ளலை நிர்வகிக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. பகுதியளவு உணவு உண்ணுதல், பசி சமிக்ஞைகளைப் பற்றி அறிந்திருப்பது போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துவதின் மூலம் எல்டிஎல் அளவைக் குறைக்க முடியும்.
இதய ஆரோக்கிய உணவுகள்
குளிர்காலத்தில் உடலில் அதிகரித்த எல்டிஎல் அளவைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக உணவில் மாற்றங்களைச் செய்வது அமைகிறது. எனவே அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவற்றை உட்கொள்வது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஓட்ஸ், பீன்ஸ் மற்றும் ஆப்பிள் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. நிறைவுற்ற கொழுப்புகளுக்கு பதிலாக நட்ஸ், வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளிலிருந்து கிடைக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Lower Your LDL: உடலின் கெட்ட கொழுப்பு அளவை சட்டென்று குறைக்க உதவும் உணவுகள்!
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது
அதிகரிக்கும் எல்டிஎல் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாக அமைவது சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைப்பதாகும். ஏனெனில், இந்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடிய சேர்க்கைகளே நிறைந்துள்ளது. எனவே முடிந்தவரை முழுவதுமான, பதப்படுத்தப்படாத உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதே போல, விற்பனை செய்யப்படும் பொருள்களில் மறைந்திருக்கும் சர்க்கரைகள்,ஆரோக்கியமற்ற கொழுப்புகளைத் தவிர்க்க லேபிள்களில் சரிபார்த்து சாப்பிடலாம். முடிந்த வரை, வீட்டிலேயே சமைப்பது சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது
கொலஸ்ட்ரால் அளவுகளில் மன அழுத்தம் தீங்கு விளைவிக்கலாம். எனவே திறம்பட அழுத்த மேலாண்மை பயிற்சி செய்வது முக்கியமாகும். இதற்கு தியானம், யோகா அல்லது எளிய சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றின் உதவியுடன் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும், நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, ஓய்வு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தலாம்.
இந்த வகை நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலம் குளிர்காலத்தில் எகிறும் கொலஸ்ட்ரால் அளவை எளிதாகக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cholesterol Control Foods: விடாபிடியான கொழுப்பை விரட்டும் அற்புத உணவுகள் இங்கே..
Image Source: Freepik
Read Next
Winter high BP causes: குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் உயர்ந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றும்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version