Cholesterol reducing tips: உடலில் தேங்கிய கொழுப்பைக் கரைக்க தினமும் நீங்க செய்ய வேண்டியவை

Best habits to lower cholesterol: பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு தேங்கி காணப்படலாம். இவ்வாறு உடலில் கொழுப்பு தேங்கியிருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் உடலில் கொழுப்பைக் குறைக்க தினமும் செய்ய வேண்டிய சில மாற்றங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Cholesterol reducing tips: உடலில் தேங்கிய கொழுப்பைக் கரைக்க தினமும் நீங்க செய்ய வேண்டியவை


Healthy habits to reduce cholesterol naturally: இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு ஆகும். உடல் எடை அதிகரிப்பு என்பது உடலில் கொழுப்பு சேர்வதையே குறிக்கிறது. இவ்வாறு உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்வது “அமைதியான கொலையாளி” என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது தெளிவான அறிகுறிகளைக் காட்டாமல் உடலில் உருவாகக் கூடியதாகும்.

ஆனால், இவ்வாறு உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வது காலப்போக்கில் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். இதைக் குறைக்க மருந்துகள் உதவக்கூடும் எனினும், சிறிய தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கலாம். இதில் உடலில் தேங்கியுள்ள அதிகளவிலான கொலஸ்ட்ராலைக் குறைக்க செய்ய வேண்டிய தினசரி நடவடிக்கைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் எகிறும் கொலஸ்ட்ரால் அளவை எளிதாகக் குறைக்க இதை ட்ரை பண்ணுங்க

கொலஸ்ட்ரால் குறைய தினமும் என்ன செய்யலாம்?

ஆய்வில் அதிக கொலஸ்ட்ரால் அளவு இறப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சில உண்மையான மற்றும் பயனுள்ள பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்.

செம்பருத்தி தேநீர் அருந்துவது

பொதுவாக காலையில் பெரும்பாலானோர் காபி, டீ போன்ற பானங்களையே அதிகம் எடுத்துக் கொள்வது. உண்மையில் காஃபின் பானங்கள் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் மறைமுகமாக அதிக கொழுப்புக்கு பங்களிக்கலாம். இதற்கு ஒரு சிறந்த மாற்றாக செம்பருத்தி தேநீரை அருந்தலாம். செம்பருத்தியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இவை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

உணவுக்குப் பிறகு நடப்பது

உணவு உட்கொண்ட பிறகு உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ளவே மனநிலை தோன்றும். சாப்பிட்ட பிறகு உடனடியாக உட்காராமல் அல்லது படுத்துக் கொள்ளாமல் மூன்று நிமிடங்கள் நடக்க வேண்டும். அவ்வாறு உணவுக்குப் பின் குறுகிய நடைபயிற்சி மேற்கொள்வது கூட கொழுப்பின் அளவு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. இந்த எளிய பழக்கம் மெட்டபாலிசத்தை சுறுசுறுப்பாக வைத்து கொழுப்பு கட்டமைப்பைத் தடுக்கிறது. நீண்ட நேர உடற்பயிற்சிகளுக்கு நேரம் இல்லையெனில் உணவுக்குப் பின் மூன்று நிமிடங்கள் நடப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

ஊறவைத்த நட்ஸ், விதைகள் சாப்பிடுவது

பொதுவாக பச்சையான நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். ஆனால், இதை ஒரே இரவில் ஊறவைத்து சாப்பிடுவது, அதன் ஊட்டச்சத்து எதிர்ப்புச் சத்துக்களை நீக்கி அதை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அதன் படி பாதாம், வால்நட்ஸ் பருப்புகள், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் போன்றவை இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கிறது. இதை ஊறவைத்து உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

உணவை நன்கு மென்று விழுங்குதல்

இது மிகவும் எளிமையான ஒன்றாகும். நாம் உணவை மெதுவாக மென்று சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உணவை முழுமையாக மெல்லும்போது, உடல் அதிக செரிமான நொதிகளை உற்பத்தி செய்கிறது. இது உடலில் கொழுப்புகளை மிகவும் திறமையாக உடைக்க உதவுகிறது. மோசமான செரிமானம் காரணமாக கொலஸ்ட்ரால் உருவாகலாம். எனவே உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Eggs and Cholesterol: தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? உண்மை என்ன?

உணவில் புளித்த உணவைச் சேர்ப்பது

அன்றாட உணவில் புளித்த உணவைச் சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். அதன் படி வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர், ஊறுகாய் மற்றும் மோர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்தும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது. நல்ல குடல் ஆரோக்கியம், குடலிலிருந்து அதிகப்படியான கொழுப்பை தீவிரமாக நீக்குகிறது. ஆய்வு ஒன்றில் குடலில் உள்ள பித்த அமிலங்களை உடைப்பதன் மூலம் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க புரோபயாடிக்குகள் உதவுவதாகக் கூறப்படுகிறது.

5 நிமிடங்கள் ஆழமாக சுவாசிப்பது

பொதுவாக அதிக மன அழுத்தம் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் ஏற்படலாம். எனவே அழுத்தமாக இருக்கும் போது, உடல் வீக்கத்தைச் சமாளிக்க அதிக கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. ஆழ்ந்த சுவாசம் மற்றும் 5 நிமிடங்கள் நினைவாற்றலை பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு ஆழமாக சுவாசிப்பது உடலில் தேங்கிய கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Natural Remedies For Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? இந்த 2 விதையை தண்ணீரில் ஊறவைத்து குடியுங்க!

Image Source: Freepik

Read Next

Antioxidant foods: இரும்பு போன்ற ஸ்ட்ராங்கான இதயத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள் இதோ!

Disclaimer