What is the best drink to lower LDL: பொதுவாக, கொலஸ்ட்ரால் என்பது உடல் புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கப் பயன்படுத்தும் ஒரு கொழுப்பு ஆகும். இது மெழுகு போன்ற பொருளான் ஆனது. கொழுப்பில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை எல்டிஎல் மற்றும் எச்டிஎல் ஆகும். இதில் எல்டிஎல் (LDL) என்பது கெட்ட கொழுப்பையும், எச்டிஎல் (HDL) என்பது நல்ல கொழுப்பையும் குறிக்கிறது. உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) இரத்த ஓட்டத்தில் இருந்து கொழுப்பை அகற்றி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) தமனிகளில் கொழுப்பு படிவுகளை ஏற்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே உடலில் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். உடலில் LDL அளவைக் கட்டுப்படுத்த மருந்துக் கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. எனினும் சில இயற்கையான வீட்டு வைத்தியமுறைகளைக் கையாள்வதன் மூலம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்றலாம். கோடைக்காலத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்:
அதிக கொழுப்பைக் குறைக்க வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய கோடைக்கால பானங்கள்
ஒருவர் அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்டால், அவர்கள் சில எளிதான உணவுமுறைகளைக் கையாள்வதன் மூலம் அதனை சரி செய்யலாம். இதில் கூடுதல் கெட்ட LDL கொழுப்பை இயற்கையாகவே கரைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய சில பானங்களைக் காணலாம்.
ஆம்லா சாறு
ஆம்லா எனப்படும் இந்திய நெல்லிக்காய் வைட்டமின் சி-யின் சக்திவாய்ந்த இயற்கை மூலமாகும். இது எண்டோதெலியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
ஊறவைத்த வெந்தய விதை தண்ணீர்
வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது குடலில் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இதில் சபோனின்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது.
ஆளி விதைகளுடன் சூடான எலுமிச்சை நீர்
எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதாகும். இவை இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. ஆளி விதைகளில் அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக, இதில் லிக்னான்கள் உள்ளது. இவை உடலில் எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
கொத்தமல்லி விதை நீர்
கொத்தமல்லி விதைகளில் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை லிப்பிட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இவை மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:
வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலை சாறு
வெள்ளரிக்காய் உட்கொள்வது உடலுக்கு நீரேற்றத்தை அளிக்க உதவுகிறது. மேலும், இதில் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதால், இவை எடை மேலாண்மைக்கு உதவுகிறது. புதினா செரிமானத்தை ஆதரிக்க உதவுகிறது. இந்த வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலை கலவை உடலை நச்சு நீக்க உதவுகிறது. இவை சிறந்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மறைமுகமாக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பீட்ரூட் மற்றும் கேரட் சாறு
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளது. இந்த நைட்ரேட்டுகள், ரிக் ஆக்சைடாக மாறி இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதே போல, கேரட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின்போன்றவை உடலிலிருந்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி, புதினா சேர்த்த கிரீன் டீ
இஞ்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் புதினா புத்துணர்ச்சியூட்டும் சுவையைச் சேர்த்து நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், கிரீன் டீ அதன் கேட்டசின்களுக்கு பெயர் பெற்றதாகும். இது எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து அதன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இந்த கலவை உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் சிறந்த தேர்வாகும்.
அதிக கொழுப்பின் அளவைக் கையாளும் போது, இந்த கோடைகால பானங்களை எடுத்துக் கொள்ளலாம். எந்தவொரு நோய் அல்லது நிலையையும் கவனித்துக்கொள்வதில் உணவுமுறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், அன்றாட வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு மருத்துவர் அல்லது நிபுணரை அணுகுவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்:
Image Source: Freepik