Fiber Foods: இந்த உணவுகளை காலை டிபனாக சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Fiber Foods: இந்த உணவுகளை காலை டிபனாக சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் தெரியுமா?


Fiber Rich Foods: பிஸியான வாழ்க்கை முறையில் நம்மில் பலர் காலை உணவைத் தவிர்த்து விடுகிறோம். காலை உணவைத் தவிர்ப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. நம் நாளை நாம் எப்படி தொடங்குகிறோம் என்பது நாள் முழுவதும் நமது ஆற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காலை உணவை தவிர்ப்பது மட்டுமல்ல, சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ளாமல் விடுவதும் தவறானது.

காலை உணவை நார்ச்சத்து மிகுந்ததாக மாற்ற இந்த 5 வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்…

ஓட்ஸ்:

ஓட்ஸ் கரையக்கூடிய நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இத்துடன் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அடங்கிய பெர்ரி மற்றும் நட்ஸை ஓட்ஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது டபுள் நன்மை தரும்.

இதையும் படிங்க: Dark Chocolate Benefits:நம்புங்க!! இந்த சாக்லேட்-ல எக்கச்சக்க நன்மைகள் கொட்டிக்கிடக்கு!

சியா புட்டிங்:

சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாகும். நன்கு ஊறவைக்கப்பட்ட சியா விதைகளுடன் சத்தான பழங்கள், நட்ஸ், தேன் அல்லது மேப்பிள் சிரப் கொண்டு சாப்பிட்டலாம்.

கோதுமை பிரட்: முழு கோதுமை பிரட் டோஸ்ட் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும். அதேபோல் டோஸ்ட் தயாரிக்க பயன்படும் வெண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். அத்துடன் புரதத்தின் நல்ல மூலமான முட்டையைச் சேர்க்கும் போது, முழு ஆரோக்கியமான காலை உணவு கிடைத்துவிடும்.

இதையும் படிங்க: Food for Increase Platelets: பிளேட்லெட் குறைந்துவிட்டதா.. இதையெல்லாம் சாப்பிடுங்கள்!

தயிர்:

தயிரில் புரதம், கால்சியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். தயிருடன் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் கிரானோலா வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதார உங்களுக்கு பிடித்த பழங்களான பெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை காலை உணவில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

காபி:

காலை உணவுக்குப் பிறகு காபி குடிப்பது நல்லது. மேலும் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. ஆனால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் காபியில் சர்க்கரை குறைவாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும், அதிகப்படியான கிரீம் தடவுவது நல்லதல்ல. இந்த உணவுகளை உங்கள் காலை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image Source: Freepik

Read Next

Food for Increase Platelets: பிளேட்லெட் குறைந்துவிட்டதா.. இதையெல்லாம் சாப்பிடுங்கள்!

Disclaimer