நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். ஆனால் காலை உணவுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன.
காலை உணவுதான் அன்றைய நாளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் ஆரம்பிக்க காரணமாக அமைகிறது. இந்த உணவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடலுக்கு மிகவும் முக்கியமானது. இதனாலேயே சத்தான உணவை உண்பது அவசியம். சில உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், காலை உணவாக சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது அல்ல. இந்த உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்….
முக்கிய கட்டுரைகள்
ஒயிட் பிரெட்:
பிரட் டோஸ்ட் என்பது பல குழந்தைகள் காலையில் விரும்பிச் சாப்பிடும் பிரேக் ஃபர்ஸ்ட் வகைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் மைதாவில் செய்யப்படும் ஒயிட் பிரட், அதாவது வெள்ளை ரொட்டி உடலுக்கு ஆரோக்கியமானது அல்லது. அதற்கு பதிலாக கோதுமை அல்லது பலவகையான தானியங்களில் செய்யப்பட்ட ரொட்டிகளை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள் இவற்றில் முக்கியமான ஒன்றாகும். ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. அதற்கு பதிலாக தர்பூசணி, கொய்யா, ஆப்பிள் சாப்பிடலாம்.
பிஸ்கட்:
காலை டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டு மகிழ்பவர்கள் ஏராளம். இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளது. இது சாியானதல்ல. காலை உணவுக்கு பாக்கெட் உணவைத் தவிர்ப்பது நல்லது. எப்போதாவது என்றில்லாமல், பேக்கிங் உணவு வகைகளை கூடுமான வரை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
காபி, டீ:

வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கக் கூடாது. ஏனெனில் இது நமது உடல் புரதம், அமினோ அமிலம் மற்றும் இரும்புச்சத்தை உறிஞ்சுவதைத் தடுப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து மட்டுமே காபி, டீ குடிப்பது நல்லது.
பொறித்த உணவுகள்:
இந்தியர்களின் காலை உணவுப்பட்டியலில், எண்ணெய் பொறித்த பூரி, வடை போன்றவற்றிற்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதனால் உடலின் செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதோடு, எண்ணெய் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Ghee: மழைக்காலத்தில் தினமும் நெய் சாப்பிட்டால்… இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
அதேபோல் செயற்கை சர்க்கரை கலக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதும் ஆபத்தானது. ஃப்ரஷ் ஜூஸ் குடிப்பது நல்லது தான் என்றாலும், காலை உணவாக பழங்களை மென்று சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும். ஏனெனில் ஜூஸ் குடித்தால் சர்க்கரை சீக்கிரம் உயரும். ஃப்ரெஷ் ஜூஸ் செய்த பிறகு, வடிகட்டப்படுவதால் சில முக்கிய சத்துக்கள் இழக்கப்படுகின்றன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை காலையில் தவிர்க்கவும். இது காலை உணவுக்கு மட்டுமல்ல, முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதேபோல, குழந்தைகள் விரும்பி உண்ணும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் நல்ல காலை உணவல்ல. இவற்றை எப்போதாவது மட்டுமே மற்ற நேரங்களில் சாப்பிடலாம்.
காலை உணவாக, வேகவைத்த முட்டை, பருப்பு, பிரவுன் ரைஸ் மற்றும் ஓட்ஸ் சாப்பிடலாம். இவை அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். காலை உணவு மூளை ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே நட்ஸ் மற்றும் விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Image source: Freepik