குளிர்காலத்தில் சாக்லெட் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என குழந்தைகளை கண்டிக்கும் தாய்மார்கள் கூட இப்படியொரு சாக்லெட் பற்றி அறிந்து கொண்டால், அதை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.

அப்படியொரு அதிசயமான சாக்லெட் இருக்கிறதா? என ஆச்சர்யப்படாதீர்கள், டார்க் சாக்லெட் தான் அது. உண்மையில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஏனெனில் டார்க் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கோகோ பவுடரில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், குளிர் காலத்தில் பரவக்கூடிய தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய 5 நன்மைகள் குறித்து பார்க்கலாம்…
1.இரத்த அழுத்தத்தை குறைக்கும்:
டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, டார்க் சாக்லேட் உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நைட்ரிக் ஆக்சைடு என்பது உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகக்கூடியது, இது ரத்த நாளங்களுக்கு ஓய்வு கொடுத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
2.கொழுப்பை குறைக்கும்:
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல். அதேபோல், நல்ல கொலஸ்ட்ராலான HDL ஐ அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இருதய நோய்கள் மற்றும் இதய பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
3.மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்:
டார்க் சாக்லேட் உங்கள் மூளையைத் தூண்டி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. 2012 ஆம் ஆண்டில், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மூளையின் சில முக்கிய பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது என்று கண்டறிந்தனர்.
இது மூளையின் செயல்பாடு மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. 2013 இல் நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது நினைவாற்றலை கிட்டத்தட்ட 30% அதிகரிக்கும் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
4.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி (ACS) நடத்திய ஆய்வில், டார்க் சாக்லேட் சாப்பிடும் போது, அது உங்கள் வயிற்றில் உள்ள குடல் பாக்டீரியாவை வெளியேற்றுவதாகவும், இதனால் இருதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாகக் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
5.ஹேப்பி ஃபிலீங்கை கொடுக்கும்:
டார்க் சாக்லேட் சாப்பிடுவது மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றும் என பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிகாட்டுகின்றன. மேலும் டார்க் சாக்லேட்டை கொஞ்சமாக எடுத்துக்கொண்டாலே செரிமான அமைப்பு மேம்பாடு, உடல் கொழுப்பை எரிப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, பசியை கட்டுப்படுத்துவது போன்ற வெயிட் லாஸுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கிறது.