Acute Kidney Disease: கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்

  • SHARE
  • FOLLOW
Acute Kidney Disease: கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்

கடுமையான சிறுநீரக செயலிழப்பிற்கான காரணங்கள்

உடலில் கடுமையான சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

  • சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும் போது சிறுநீரகம் சேதாரமடைந்து கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
  • இரசாயனங்கள் அல்லது கனரக உலோகங்கள் போன்ற ஆட்டோஇம்யூன் (தன்னெதிர்ப்பு நிலைமைகள்), அதாவது சிறுநீரக திசுக்களை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பே தாக்குவது போன்றவற்றால் சிறுநீரகத்தில் காயம் ஏற்படலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
  • சிறுநீர்க் குழாய்களில் தடுப்பு ஏற்பட்டு, சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்பைகளுக்கு செல்லும் சிறுநீர் தடைபடலாம். நாளடைவில் ஒரு சிறுநீரகத்திலோ அல்லது இரண்டிலுமோ சிறுநீர் தேங்கி வீக்கம் ஏற்படலாம். இது கடுமையான சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கலாம்.
  • மேலும், நீரிழிவு நோய், குறைந்த இரத்த அழுத்தம், கடுமையான நீரிழப்பு போன்றவை கடுமையான சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையை அதிகரிக்கக் கூடிய காரணிகளாக அமைகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கான உணவு முறைகள்

இந்த கடுமையான சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையைத் தவிர்க்க சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உணவு முறைகளைக் கையாள வேண்டும். சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உணவு என்பது பாஸ்பரஸ், சோடியம் மற்றும் புரதம் குறைவாக உள்ள ஒன்றாகும். மேலும் உயர்தர புரதத்தை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சில சிறுநீரக நோயாளிகள் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தைக் குறைக்க வேண்டும்.

குறைந்த அளவு பொட்டாசியம்

பொட்டாசியம் நாம் உண்ணும் பல உணவுகளில் காணப்படும் ஒரு கனிமப் பொருளாகும். இது உடலில் இயற்கையாகவே காணப்படுகிறது. இது இதயத்துடிப்பை சீராக வைத்து, தசைகளை சரியாக வேலை செய்ய உதவுகிறது. சரியான அளவு பொட்டாசியத்தை வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ஆனால் சிறுநீரக செயலிழப்பின் போது, இவை அதிக பொட்டாசியத்தை அகற்ற முடியாது. எனவே அதிகளவு பொட்டாசியம் அளவு உடலில் உருவாகும் போது அதை அகற்ற முடியாது. இது இரத்தத்தில் அதிக பொட்டாசியம் அல்லது ஹைபர்கேமியா என அழைக்கப்படுகிறது. இது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மாரடைப்பு, தசை பலவீனம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

சோடியம் உட்கொள்வதைக் குறைப்பது

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகளவு சோடியம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சிறுநீரகங்களில் உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் திரவத்தை போதுமான அளவு வெளியேற்ற முடியாது. இரத்த ஓட்டம் மற்றும் திசுக்களில் சோடியம் மற்றும் திரவம் தேங்கும் போது, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த தாகம், இதய செயலிழப்பு பிரச்சனை மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

பாஸ்பரஸ் உட்கொள்ளலைக் கவனிப்பது

எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதில் பாஸ்பரஸூம் ஒன்றாகும். இது தசை இயக்கத்திற்கு உதவுகிறது. பாஸ்பரஸ் உள்ள உணவை உட்கொள்ளும் போது சிறுகுடல் பாஸ்பரஸை உறிஞ்சி, எலும்புகளில் சேமித்து வைத்துக் கொள்கிறது. சாதாரணமாக வேலை செய்யும் சிறுநீரகங்கள், இரத்தத்தில் உள்ள கூடுதல் பாஸ்பரஸை அகற்றும். ஆனால், சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படும் போது, பாஸ்பரஸ் அகற்றுவது நிறுத்தப்பட்டு, அதிகளவு தேங்கியிருக்கலாம். எனவே பாஸ்பரஸ் அளவை நிர்வகிக்க, சிறுநீரக செயல்பாடு பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீரக உணவியல் நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

புரத உணவுகள்

நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு சரியான அளவு புரதத்தின் நுகர்வு அவசியமானதாகும். ஏனெனில் நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் அளவு வேறுபடுகிறது. திசு பராமரிப்பு மற்றும் உடலின் பிற செயல்களுக்கு புரதம் அவசியமாகும். எனவே, சிறுநீரக மருத்துவர் அல்லது சிறுநீரக உணவியல் நிபுணர்களின் அறிவுரைப்படி, நோயின் கட்டத்திற்கு ஏற்றவாறு புரதத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு சாப்பிடுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Anti-Aging Foods List: முதுமை எதிர்ப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.?

Image Source: Freepik

Read Next

Ginger Black Pepper Tea: மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப இஞ்சி, கருப்பு மிளகு டீ குடிப்பது மிக அவசியம்!

Disclaimer

குறிச்சொற்கள்