World kidney cancer day 2025: கிட்னி எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க

Best way to make your kidneys healthy: சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதில் சிறுநீரக கேன்சர் வராமல் தடுக்க நாம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
World kidney cancer day 2025: கிட்னி எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க


What should i do to keep my kidney healthy: ஆண்டுதோறும் உலகலெங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வலிமையான நபர்களைக் கூட உலுக்கக்கூடிய ஒரு நோயறிதல் ஆகும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 2025 ஆம் நாள் உலக சிறுநீரக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருள் "உங்கள் சிறுநீரகங்களுக்கு கொஞ்சம் அன்பைக் காட்டுங்கள்" என்பதாகும். இது உடலின் மிக முக்கியமான ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் இரண்டு உறுப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

உலக சிறுநீரக புற்றுநோய் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

உலக சிறுநீரக புற்றுநோய் தினம் ஜூன் 2017 இல் சர்வதேச சிறுநீரக புற்றுநோய் கூட்டணியால் (IKCC) தொடங்கப்பட்டது. சிறுநீரகப் புற்றுநோய் அதிகரித்து வரும் விகிதங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும், ஆரம்பகால கண்டறியதல், சிகிச்சை அணுகல் அல்லது நோயாளி அனுபவங்கள் போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு புதிய கருப்பொருளை ஏற்றுக்கொள்கிறது.

சிறுநீரகப் புற்றுநோய் ஆனது சிறுநீரக திசுக்களில் வீரியம் மிக்க செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் போது உருவாகக் கூடியதாகும். இந்த செல்களின் வளர்ச்சி கட்டிகள் உருவாக வழிவகுக்கும். இவ்வாறு சிறுநீரகத்தில் தீங்கு விளைவிக்கும் செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும்போது இந்த புற்றுநோய் உருவாகிறது. இதுவே கட்டிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த கட்டிகள் பெரும்பாலும் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. இதனால் அவற்றை முன்கூட்டியே கண்டறிவது கடினமாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகள் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு அவசியமானவை.. இவை புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கும்.!

பல நேரங்களில், பிற பிரச்சினைகளுக்கான ஸ்கேன்களின் போது, இவை தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. எனவே தான் உலக சிறுநீரக புற்றுநோய் தினத்திற்கு ஒரு தனி தினம் அனுசரிக்கப்பட்டு, அதன் விழிப்புணர்வை பரப்புவதன் மூலம், சிறுநீரகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த ஏதுவாக அமைகிறது.

image

kidney-stones-1745860748341.jpg

சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?

சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருப்பது

வழக்கமான உடற்பயிற்சி உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுவது மட்டுமல்லாமல், நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை இரண்டுமே சிறுநீரக பாதிப்பைத் தடுப்பதற்கு முக்கியமானவையாகும். எனவே நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடனம் போன்ற எளிய உடல் செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

எடையிழப்பு மற்றும் சீரான உணவு எடுத்துக் கொள்வது

அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தக்கூடிய பல உடல்நல நிலைமைகளுக்கு ஆளாக நேரிடலாம். இதில் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்றவை அடங்கும். மேலும் சிறுநீரகத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடிய சில உணவுகளைக் குறைப்பது அவசியமாகும். அதே சமயம், மீன், முழு தானியங்கள், காலிஃபிளவர், அவுரிநெல்லிகள் மற்றும் இன்னும் பல இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ள புதிய பொருட்களை சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: World Kidney Cancer Day 2025: சிறுநீரக புற்றுநோய்க்கு உங்கள் வாழ்க்கை முறை காரணமா.? முக்கிய காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்..

இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, நீரிழிவு, இதய நோய் அல்லது அதிக கொழுப்பு போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடலில் ஏற்படும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களின் உதவியுடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பது, வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வது மற்றும் மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றை மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

image

blood-pressure-increase-in-hot-weathe-(1)-1743613186338.jpg

நிறைய திரவங்களைக் குடிப்பது

உடலைப் போதுமான அளவு நீரேற்றத்துடன் வைப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது சிறுநீரகங்களிலிருந்து சோடியம் மற்றும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான அபாயத்தையும் குறைக்கலாம். ஒவ்வொருவரும் அவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை இலக்கு வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, முன்பு சிறுநீரகக் கற்கள் இருந்தவர்கள், எதிர்காலத்தில் கல் படிவதைத் தடுக்க, சிறிது தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

புகைபிடிப்பதை நிறுத்துவது

பொதுவாக புகைபிடிப்பது நுரையீரல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம். இது பல வகையான புற்றுநோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக அமைகிறது. எனவே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு புகைபிடிப்பதை நிறுத்துவது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. கிட்னி கேன்சரா இருக்கலாம்! மருத்துவர் தரும் தடுப்பு முறைகள் இதோ

Image Source: Freepik

Read Next

இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. கிட்னி கேன்சரா இருக்கலாம்! மருத்துவர் தரும் தடுப்பு முறைகள் இதோ

Disclaimer