World kidney day 2025: கிட்னி ஹெல்த்தியா இருக்க தினமும் இந்த விஷயங்களைக் கண்டிப்பா செய்யுங்க

Habits to boost kidney health: அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனினும், இந்த நடவடிக்கைகளை மாற்றுவதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இதில் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாம் பின்பற்ற வேண்டிய சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
World kidney day 2025: கிட்னி ஹெல்த்தியா இருக்க தினமும் இந்த விஷயங்களைக் கண்டிப்பா செய்யுங்க

Healthy habits to follow everyday to prevent kidney problem: ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2025 ஆம் ஆண்டில் உலக சிறுநீரக தினமானது மார்ச் மாதத்தில் 13 ஆம் நாளான இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினமானது சிறுநீரக ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய தினமாகும். இந்த 2025 ஆம் ஆண்டில் உலக சிறுநீரக தினத்தில் "உங்கள் சிறுநீரகங்கள் நலமாக உள்ளதா? முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்த கருப்பொருளானது சிறுநீரக நோய்களைத் தடுப்பதில் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் முன்னெச்சரிக்கை மேலாண்மையின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. இந்த தினம் ஆபத்து காரணிகள் குறித்து மக்களுக்குக் கல்வி கற்பித்தல், ஆரம்பகால கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டைப் பராமரிக்க தடுப்பு நடத்தைகளை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பான முறையில் பராமரிக்கலாம். இதில் சிறுநீரகங்களைப் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய சில பழக்கவழக்கங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney damage prevention: கிட்னி பாதிப்பு வராமல் இருக்க இந்த உணவுகளை நீங்க தினமும் சாப்பிடணும்!

சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும் தினசரி பழக்கவழக்கங்கள்

சீரான உணவைப் பின்பற்றுவது

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவில் ஏராளமான புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். அதே சமயம், அதிகப்படியான உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். சோடியம் உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணமான உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம். அதே நேரத்தில், கீரை, வாழைப்பழங்கள் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது.

போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது

சிறுநீரக செயல்பாட்டிற்கு போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகும். இவ்வாறு நீரேற்றமாக இருப்பது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது. எனினும், அதிகப்படியான நீர் உட்கொள்ளல் சிறுநீரகங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தலாம். எனவே ஒரு நாளைக்கு சுமார் 8 கிளாஸ் தண்ணீர் உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது

உடலில் இரத்த சர்க்கரை அதிகரிப்பால், காலப்போக்கில் சிறுநீரக சேதத்தை ஏற்படுத்தலாம். இது நீரிழிவு நெஃப்ரோபதிக்கு வழிவகுக்குகிறது. எனவே, சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்கள் தங்கள் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எனவே இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தும் உணவைப் பின்பற்றலாம்.

அதிக புரத உணவுகளை வரம்பிடுதல்

உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானதாக இருப்பினும், சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட மூலங்களிலிருந்து புரதங்களை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, சிறுநீரக நோய் அபாயத்தில் உள்ளவர்கள், சிறுநீரகங்களின் சுமையைக் குறைக்க தாவர அடிப்படையிலான மூலங்கள், மீன், மெலிந்த இறைச்சிகளிலிருந்து மிதமான புரத உட்கொள்ளலைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இரவில் தோன்றும் இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க... இந்த நோயாக கூட இருக்கலாம்!

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் உடல் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இவை அனைத்துமே சிறுநீரக நோய்க்கு பங்களிக்கும் காரணிகளாகும். எனவே நாள்தோறும் நடைபயிற்சி, நீச்சல் அல்லது யோகா போன்ற மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.

அதிகப்படியான மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது

மது அருந்துவது உடலிலிருந்து நீர்ச்சத்துக்களை இழக்க வைத்து, சிறுநீரக அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதே சமயத்தில், புகைபிடித்தல் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து, சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்கலாம். எனவே அதிகப்படியான மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது அவசியமாகும். இது சிறுநீரகம் தொடர்பான நோய்களின் அபாயத்தை கணிசமாகக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த பழக்கங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம். இதன் மூலம் சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைத்து, நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Kidney Health: சிறுநீரகங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க 8 காலை பழக்கங்கள்!

Image Source: Freepik

Read Next

Pain Free Driving: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு., இப்படி வண்டி ஓட்டினால் முதுகு, கழுத்து வலி வரவே வராது!

Disclaimer