Healthy beverages that keep your kidney health: உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு முதன்மையான பங்கு வகிக்கிறது. அவ்வாறே, உடலில் ஆரோக்கியமான நீரின் சமநிலையை பராமரிப்பது மட்டுமல்லாமல் உப்பு, pH அளவு மற்றும் பொட்டாசியம் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்தத்தை வடிகட்டுவதற்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இதை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியமாகும். இதில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுமுறைகளும் அடங்கும்.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் உதவியுடன் சிறுநீரக பிரச்சனைகளைத் தடுப்பதுடன், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனினும், சில காரணிகள் சிறுநீரக பாதிப்பு அல்லது நோயை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) போன்ற நீண்ட கால சிக்கல்களைத் தடுக்க சிறுநீரகங்களைப் பாதுகாப்பது அவசியம். சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உடலை நீரேற்றமாக வைப்பது அவசியமாகும். அதன் படி, சிறுநீரகங்கள் சீராக இயங்க வைக்க சில இரவு பானங்கள் உதவுகிறது. இதில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் சில இரவு பானங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Stone Foods: சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!
இரவில் சிறுநீரக பாதிப்பைத் தடுக்கும் பானங்கள்
இரவு நேர வழக்கத்தில் சரியான பானங்களைச் சேர்ப்பது சிறந்த சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இவை உடலில் நச்சுத்தன்மையை ஆதரிக்கவும், சிறுநீரக பாதிப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் இனிமையான மற்றும் நன்மை பயக்கும் இரவு நேர பானங்களைக் காணலாம்.
தண்ணீர்
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியமாகும். இவை உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், நீரேற்றமாக இருப்பதற்கும் உதவுகிறது. எனவே படுக்கைக்கு முன்னதாக நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்வது சிறுநீரகங்கள் இரவு முழுவதும் சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. எனினும், இரவு நேரத்தில் போதுமான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், இது இரவு தூக்கத்தைப் பாதிக்கலாம்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீர் பொட்டாசியம் நிறைந்ததாகும். இவை சிறுநீரக செயல்பாட்டிற்கு முக்கியமானதாகும். இவை இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், உடலிலிருந்து அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது. எனவே உறங்கும் முன் ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் அருந்துவது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
மூலிகை தேநீர்
இரவு நேரத்தில் கெமோமில் அல்லது டேன்டேலியன் டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் கெமோமில் டீ அருந்துவது இரவு தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இது அமைதியான பண்புகளைக் கொண்டுள்ளது. அதே போல, டேன்டேலியன் தேநீர் அருந்துவது ஒரு இயற்கையான டையூரிடிக் ஆக செயல்படுகிறது. மேலும், இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சைச் சாறு
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு எலுமிச்சைச் சாறு அருந்துவது சிறந்த வழியாகும். இதற்கு எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமே காரணமாகும். இவை சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கிறது. மேலும், இது நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. எனவே படுக்கைக்கு முன்னதாக ஒரு சுவையான எலுமிச்சை தண்ணீர் அருந்துவது புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. இதற்கு புதிதாகப் பிழிந்த எலுமிச்சையை தண்ணீரில் சேர்த்து அருந்தடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: kidney Stones: இவர்களுக்கெல்லாம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகம்.!
பீட்ரூட் சாறு
பீட்ரூட் ஆனது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்ததாகும். இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இரவில் பீட்ரூட் ஜூஸ் அருந்துவது சிறுநீரக செயல்பாட்டை ஆதரிப்பதுடன், உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
கிரீன் டீ
இது சிறுநீரகத்திற்கான சிறந்த பானங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது கேடசின்களால் நிறைந்ததாகும். மேலும், இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஒரு பிரபலமான பானமாக இருப்பதால், தூங்கும் முன் கிரீன் டீ அருந்துவது சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் கால்சியம் ஆக்சலேட்கள் நிறைந்துள்ளது. இவை சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது. ஆய்வுகளின்படி, ஆப்பிள் சைடர் வினிகர் அசிட்டிக் அமிலத்தின் வலுவான இருப்பாக அமைவதால், இது சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது. இவை சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதுடன், கூடுதலாக கற்களால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
இந்த வகை இரவு நேர ஆரோக்கியமான பானங்களை அருந்துவதன் மூலம், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Health: சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் 8 உணவுகள் எது தெரியுமா?
Image Source: Freepik