How quickly does diabetes damage the kidneys: இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு வகை நாள்பட்ட நோயாக நீரிழிவு நோய் அமைகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போதோ அல்லது குறையும் போதோ ஏற்படக்கூடியதாகும். பொதுவாக, இது உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது. இன்சுலின் என்பது குளுக்கோஸை செல்களுக்குள் நுழைய உதவும் ஒரு வகை ஹார்மோன் ஆகும்.
இதனால் இது ஆற்றலுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனினும், நீரிழிவு நோயாளிகளுக்கு பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தி இருப்பதை நாம் அறிவோம். எனவே நோய்வாய்ப்படும் அபாயமும் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறுநீரக தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. இது சாரதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர்-உள் மருத்துவம் டாக்டர் ஷ்ரே ஸ்ரீவாஸ்தவா என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த குறைந்த GI கொண்ட காய்கறிகளை சாப்பிடுங்க..
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதா?
பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவு சீராக உள்ளதா என்பதை தவறாமல் சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கும் எதையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவுகள் உடலில் நீரிழிவு உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முக்கிய கட்டுரைகள்
இதில், இதய நோய், மாரடைப்பு போன்ற கடுமையான நிகழ்வுகள் கூட நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த வரிசையில் சிறுநீரக தொற்று ஏற்படும் அபாயம் இருக்குமா என்பதற்கு மருத்துவர் பதில் கூறியுள்ளார். ஆம். உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கு சிறுநீரக தொற்று அபாயம் உண்டாகலாம்.
மருத்துவரின் கூற்றுப்படி,”நீரிழிவு நோய் காரணமாக, சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் மற்றும் நெஃப்ரான்கள் சேதமடைகிறது. இவை சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டி அலகுகள் ஆகும். இதன் சேதம் காரணமாக, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். சில கடுமையான நிகழ்வுகளில் கூட, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகலாம். UTI ஆபத்து UTI சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது சிறுநீரக தொற்றுக்கு ஒரு காரணமாக மாறுகிறது” என்று கூறியுள்ளார்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
பொதுவாக சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு உடலுக்குப் போதுமான தண்ணீர் குடிப்பது முக்கியமாகும். இதை நீரிழிவு நோயாளிகளும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இது சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: டயாபடீஸை ரிவர்ஸ் செய்யும் சூப்பர் டீ ரெசிபி இதோ! நிபுணர் சொன்னர் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
இன்சுலினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இன்சுலின் அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். அவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இன்சுலின் கோளாறு உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும். இதன் விளைவு சிறுநீரகங்களிலும் காணப்படுகிறது.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது
சில நேரங்களில் ஒரு நபர் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்க வேண்டிய சூழ்நிலைகள் எழக்கூடும். ஆனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதுவே சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே தேவைப்படும் போதெல்லாம் சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் இது உடலிலிருந்து நச்சுக்களை நீக்குகிறது.
இது தவிர, ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்வதும் அவசியமாகும். எனவே நீரிழிவு நோயைத் தவிர்க்கவும் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் சுகர் லெவலைக் கட்டுப்படுத்தலாமா? நிபுணர் சொல்லும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik