What is the best tea for diabetics to drink: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகலாம். குறிப்பாக, இன்று சிறுவயது முதலே பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் 101 மில்லியன் கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவுக்கு முந்தைய பிரச்சனையானது 136 மில்லியன் மக்களில் காணப்பட்டது.
எனவே நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய பிரச்சனை உள்ளவர்கள் இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். நீரிழிவு பிரச்சனையை எதிர்கொள்ளும் பலரை நாம் பார்த்திருப்போம். மேலும் மருத்துவர் நீரிழிவு நோயாளிகள் தேநீர் சாப்பிடுவதைத் தடை செய்துள்ளனர். ஆனால், நீரிழிவு நோயாளிகள் தேநீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். தேநீர் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது கடினமாகும். எனவே நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நோயாளி யாரேனும் தேநீரைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்த சிறப்பு தேநீரை வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம்.
இந்த தேநீர் அருந்துவது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இந்த டீ ரெசிபி குறித்து டெல்லியின் குடல் மற்றும் ஹார்மோன் சுகாதார பயிற்சியாளர் மன்பிரீத் கல்ரா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பதிவில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: எகிறும் சுகர் லெவலைக் கன்ட்ரோலிக் வைக்கும் ஏலக்காய் டீ.. இந்த மூன்று வழிகளில் செஞ்சி குடிங்க
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு தேநீர் தயாரிக்கும் முறை
தேவையானவை
- இலவங்கப்பட்டை - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி விதைகள் - 1 தேக்கரண்டி
- கருப்பு மிளகு - ஒரு சிட்டிகை
- வெந்தய விதைகள் - 1/4 தேக்கரண்டி
- ஜாமூன் விதைப் பொடி - 1/4 தேக்கரண்டி
- இஞ்சி - 1/2 அங்குல துருவிய இஞ்சி
- மஞ்சள் - ஒரு சிட்டிகை
செய்முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் ஒன்றரை கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடாக்க வேண்டும்.
- இதில் இலவங்கப்பட்டை, வெந்தயம், கொத்தமல்லி விதைகள், கருப்பு மிளகு மற்றும் இன்னும் பிற பொருள்களை சூடான நீரில் சேர்க்க வேண்டும்.
- இதை எல்லாவற்றையும் பாதியாகக் குறைத்து நிறம் மாறும் வரை வேகவைத்து, வடிகட்டலாம்.
- அதன் பிறகு, இந்தக் கலவையை ஒரு கப்பில் வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோய்க்கு இந்த தேநீர் எவ்வாறு உதவுகிறது?
மேலே கூறப்பட்ட, ஏழு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சிறப்பு தேநீர் எவ்வாறு நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பது குறித்து ஹார்மோன் சுகாதார பயிற்சியாளர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கு
இந்த தேநீர் ரெசிபியில் கருப்பு மிளகு பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கருப்பு மிளகில் 'பைப்பரின்' உள்ளது. இவை இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது.
ஆற்றல் அளவை நிர்வகிப்பதற்கு
இந்த தேநீரில் உள்ள பொருள்களில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. எனவே இதை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, இந்த பானம் மன அழுத்தத்தை விடுவிப்பதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Matcha tea for diabetes: சர்க்கரை நோயாளிகள் மட்சா டீ குடிப்பது நல்லதா? இத தெரிஞ்சிட்டு குடிங்க
இரத்த குளுக்கோஸை கட்டுக்குள் வைத்திருக்க
குடல் மற்றும் ஹார்மோன் சுகாதார பயிற்சியாளர், இந்த தேநீர் ரெசிபியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து காணப்படுவதாகக் கூறுகின்றனர். இவை இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் பிரச்சினைகளைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.
முடிவு
இந்த தேநீர் ரெசிபியானது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. ஆனால், நீரிழிவு நோயைத் தவிர வேறு எந்த நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தேநீரை அருந்துவதற்கு முன்பாக ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் சுகர் லெவலைக் கட்டுப்படுத்தலாமா? நிபுணர் சொல்லும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik