Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Doctor Verified

நீரிழிவு நோயாளிகள் தினமும் குடிக்க வேண்டிய 4 ஜூஸ்கள் – டாக்டர் விளக்கம்

நீரிழிவு நோயாளிகள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட், சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். டாக்டர் ஷர்மிகா யூடியூப்பில் பகிர்ந்த 4 ஜூஸ்கள் இங்கே.

நீரிழிவு நோய் (Diabetes) இன்று இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உணவுப் பழக்க வழக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டர் ஷர்மிகா, யூடியூப் வழியாக நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய உணவு வழிகாட்டுதல்களையும், 4 வகை ஜூஸ்களையும் பகிர்ந்துள்ளார்.

Video Link: https://youtu.be/SQ51CfELDaU

உணவுப் பழக்கத்தில் கவனிக்க வேண்டியவை

* தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அரிசி, பிரெட், பாஸ்தா, உருளைக்கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும்.

* சர்க்கரை நிறைந்த பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* புகைப்பழக்கம், மதுப் பழக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* உடல் எடையை கட்டுப்படுத்த தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* குறைந்தது 7–8 மணி நேரம் உறங்க வேண்டும்.

what-are-the-best-foods-for-diabetics-02

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய 4 ஜூஸ்கள்

1. நாவல் பழம் ஜூஸ்

நாவல் பழம் ஜூஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த இயற்கை மருந்து. நாவல் பழத்தில் உள்ள ஜாம்போலின் என்ற பொருள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

2. கேரட் + பீட்ரூட் ஜூஸ்

கேரட் கண் ஆரோக்கியத்துக்கும், இரத்த சோகையை குறைக்கவும் பயன்படும். பீட்ரூட் இயற்கையாக குளுக்கோஸ் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

3. கொத்தமல்லி இலை ஜூஸ்

இதை குடிப்பது கல்லீரல் சுத்திகரிப்பு, இரத்த சர்க்கரை குறைப்பு மற்றும் உடல் சூடு தணிக்கும்.

4. கீரை ஜூஸ்

இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்ததால், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சக்தி தரும் பானம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை குறைய 5 மேஜிக் யோகா.! மருத்துவர் பரிந்துரை..

மருத்துவர் பரிந்துரைகள்

* இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிபார்க்க வேண்டும்.

* சுயமாக உணவு கட்டுப்பாடுகளை மாற்றாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் முன்னெடுக்க வேண்டும்.

* மனஅழுத்தம் குறைப்பு மற்றும் உடல் எடை கட்டுப்பாடு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக அவசியம்.

* "நோய் குணமாகிவிட்டது" என்ற தவறான நம்பிக்கையில் மீண்டும் பழைய உணவுப் பழக்கங்களைத் தொடர்ந்தால், டைப் 2 நீரிழிவு மீண்டும் உருவாகும் அபாயம் அதிகம்.

1

இறுதியாக..

நீரிழிவு நோய் ஒருமுறை வந்துவிட்டால் அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால், சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். டாக்டர் ஷர்மிகா பரிந்துரைத்த இந்த 4 ஜூஸ்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தேர்வாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவர் பகிர்ந்த பொது ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொருவரின் உடல்நிலையும் வேறுபடும். எனவே, எந்த உணவுமுறையையும் மாற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

Read Next

சர்க்கரை குறைய 5 மேஜிக் யோகா.! மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 26, 2025 10:12 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content