Sat Sep 12, 2026 | 01:53 AM IST

Doctor Verified

சர்க்கரை குறைய 5 மேஜிக் யோகா.! மருத்துவர் பரிந்துரை..

Yoga for diabetes in Tamil: மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைத்த 5 யோகா ஆசனங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவும். எந்த யோகாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் (Diabetes) உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. ரத்தத்தில் இன்சுலின் உற்பத்தி குறைவதாலோ, அல்லது உடல் அதை சரியாக பயன்படுத்த முடியாததாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, பல்வேறு உடல் பிரச்சினைகள் உருவாகின்றன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை அவசியம். இதனுடன் சேர்த்து, யோகா தினசரி பழக்கத்தில் இடம் பெறும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவை இயற்கையாகக் குறைத்து, உடலின் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். அவர் குறிப்பிட்ட 5 முக்கிய யோகா ஆசனங்கள் பின்வருமாறு.

Video Link: https://youtu.be/ryrE3ZevUFk

சர்க்கரையை குறைக்க உதவும் யோகா ஆசனங்கள்

1. உட்கடாசனா

இது நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் உடலை வைக்கும் யோகா ஆசனம். இதனால் தசைகள் வலிமை பெறும். கணையம் (Pancreas) சுரப்பி செயல்பாட்டை தூண்டுகிறது. மேலும் இன்சுலின் உற்பத்தி மேம்படும். இந்த ஆசனத்தை தினமும் 5–10 முறை செய்து வரலாம்.

in-which-diabetes-should-pay-attention-in-monsoon-01

2. சக்ராசனா

இந்த ஆசனத்தில் உடல் வளைந்து சக்கரத்தைப் போன்ற வடிவம் பெறும். இது வயிற்றுப் பகுதி உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் மேம்படும். மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. நிபுணர் வழிகாட்டுதலுடன் கற்றுக்கொள்வது நல்லது.

3. அர்த்த மத்சேயேந்தர ஆசனா

இது உடலைத் திருப்பி செய்யப்படும் ஆசனம். இது கல்லீரல் மற்றும் கணையத்தை (Pancreas) தூண்டுகிறது. வயிற்றுக் கொழுப்பு குறைக்கிறது. இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேம்பட உதவுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் 2–3 நிமிடங்கள் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கீழ் உடலை ஸ்ட்ராங்காக வைக்க மட்டுமல்ல.. மூளைத் திறனை மேம்படுத்தவும் இந்த 5 யோகாசனங்கள் உங்களுக்கு உதவும்..

4. பச்சிமொத்தாசனா

இது முன் வளைந்து செய்யப்படும் ஆசனம். இது வயிற்று சுரப்பிகள் சுறுசுறுப்பாகும். மன அழுத்தம் குறையும். இரத்த ஓட்டம் சீராகி, சர்க்கரை அளவு குறையும். கால்களை நேராக நீட்டி, விரல்களை தொடும் வகையில் முன் வளைந்து செய்ய வேண்டும்.

5. பவனமுக்தாசனா

இது முதுகில் படுத்து, முழங்கால்களை மார்புக்கு அணைக்கும் ஆசனம். இது செரிமானத்தை மேம்படுத்தும். வாயுத் தொந்தரவு குறையும். இன்சுலின் உற்பத்தி சீராகும். தினமும் 5–10 முறை செய்து வரலாம்.

யோகாவின் இறுதி படி – சவாசனா

யோகா செய்து முடித்த பிறகு, சவாசனா அவசியம். உடலை தளர்த்தி, சுவாசத்தை சமப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Main

மருத்துவர் கருத்து

சர்க்கரை நோய் என்பது கட்டுப்படுத்தக்கூடிய நோய். ஆனால் அதை மருந்துகளிலேயே மட்டுப்படுத்தாமல், யோகா, தியானம், உணவு பழக்கம், ஒழுங்கான தூக்கம் ஆகியவற்றை இணைத்தால், ரத்த சர்க்கரை அளவை இயற்கையாகக் குறைக்க முடியும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.

இறுதியாக..

சர்க்கரை நோயாளிகள் தினசரி உட்கடாசனா, சக்ராசனா, அர்த்த மத்சேயேந்தர ஆசனா, பச்சிமொத்தாசனா, பவனமுக்தாசனா ஆகிய யோகா ஆசனங்களைச் செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுப்படுத்த முடியும். யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் ஒரே நேரத்தில் தருகிறது.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வுக்காக மட்டுமே. யோகா செய்யும் முன், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், தங்களின் மருத்துவர் அல்லது யோகா நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

குறைந்த இரத்த சர்க்கரையால் இந்த பிரச்சனை உங்களுக்கு வரலாம்.. தடுக்க உதவும் குறிப்புகள் இதோ! மருத்துவர் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 25, 2025 09:14 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content