வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் சுகர் லெவலைக் கட்டுப்படுத்தலாமா? நிபுணர் சொல்லும் டிப்ஸ் இதோ

Can onions reduce blood sugar: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில உணவுப்பொருள்கள் உதவுகின்றன. இந்த இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துவது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் வெங்காயம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுமா என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் சுகர் லெவலைக் கட்டுப்படுத்தலாமா? நிபுணர் சொல்லும் டிப்ஸ் இதோ

Can eating onions lower blood sugar levels: இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. இது அவர்களுக்கு சில சமயங்களில் கடினமாகத் தோன்றலாம். எனவே தான் இது போன்ற சூழ்நிலையில், நீரிழிவு பிரச்சனைகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை மக்கள் இளம் வயதிலேயே கடுமையான நோய்களைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், மக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

அதே சமயம், சிலர் தங்கள் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே நிர்வகிக்க முயற்சி செய்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில், அன்றாட உணவில் சேர்க்கப்படும் சில உணவுப்பொருள்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதில் வெங்காயமும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இதில் வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரையைக் குறைக்குமா என்பது குறித்து சுகாதார பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் வர்னித் யாதவ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Raw Onion Benefits: இதய நோய் முதல் கேன்சர் வரை.. பச்சை வெங்காயம் தரும் அற்புத நன்மைகள்.!

வெங்காயம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையுமா?

சுகாதார பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் வர்னித் யாதவ் அவர்களின் கூற்றுப்படி, “வெங்காயம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், வெங்காயம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில், இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வெங்காயம் உட்கொள்வது சரியானதல்ல. வெங்காயம் சாப்பிட விரும்பினால், அதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மட்டும் சாப்பிடாதீர்கள். மாறாக வேறு சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது எப்படி?

  • நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதும், அதை இயல்பாக வைத்திருப்பதும் கடினமாக இருக்கலாம். எனினும், இதை இயற்கையாகவே கட்டுப்படுத்துவது சாத்தியமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், ஊட்டச்சத்து நிபுணர் வர்னித் யாதவ் பரிந்துரைத்த இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்.
  • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவிலான உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருக்கும். இவை அனைத்துமே இரத்த சர்க்கரையை பாதிக்கக்கூடியதாகும். எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க அன்றாட உணவில் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைச் சேர்க்கலாம்.
  • உணவில் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும், அதிகம் சர்க்கரை உட்கொள்வது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். மேலும் வெள்ளை சர்க்கரை, இனிப்புகள் மற்றும் குளிர் பானங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதும் முக்கியமாகும்.
  • இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு, உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் அன்றாட உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற சீரான உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: வெங்காயம் சாப்பிடுவதால் இந்த நோயெல்லாம் குணமாகும்; இதன் நன்மைகள் இங்கே!

  • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மற்றொரு சிறந்த வழியாக, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அடங்கும்.. எனவே, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் லேசான பயிற்சிகள் அல்லது ஜாகிங் போன்ற செயல்பாடுகளை உடற்பயிற்சி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடிவு

வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வெங்காயத்தை மட்டும் சாப்பிடாமல், இதை நிர்வகிப்பதற்கு நிபுணர்கள் வழங்கும் பிற குறிப்புகளையும் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Onion For Diabetes: வெங்காயத்த இப்படி எடுத்துக்கோங்க.. சர்க்கரை நோய் கட்டுப்படும்!

Image Source: Freepik

Read Next

அதிகரிக்கும் சர்க்கரையை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும் சூப்பர் மூலிகைகள் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்