Onion For Diabetes: வெங்காயத்த இப்படி எடுத்துக்கோங்க.. சர்க்கரை நோய் கட்டுப்படும்!

  • SHARE
  • FOLLOW
Onion For Diabetes: வெங்காயத்த இப்படி எடுத்துக்கோங்க.. சர்க்கரை நோய் கட்டுப்படும்!

உடல் உழைப்பு இல்லாமை, வாழ்க்கை முறை மாற்றங்கள், வேலை அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் பிற காரணங்களால், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்த முடியுமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது. 

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் சர்க்கரை உள்ளவர்களுக்கு வெங்காயம் தெய்வீக மருந்தாகச் செயல்படுகிறது. அது எப்படி என்பதை இங்கே காண்போம். 

வெங்காயம் ஜூஸ் நன்மைகள் (Onion Juice Benefits)

நீரிழிவு நோயாளிகள் வெங்காய ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் வெங்காயச் சாற்றைக் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 50 சதவிகிதம் வரை குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க: Okra Water Benefits: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெண்டைக்காய் தண்ணீர். எப்படி தெரியுமா?

இதை போல் நம் நாட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டது. சோலாப்பூர் ஸ்ரீ ராமச்சந்திர மகா வித்யாலயா விஞ்ஞானிகள் சிலர் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவிற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை 20 மில்லி வெங்காய ஜூஸ் வழங்கப்பட்டது. மற்றொரு குழுவினருக்கு வெங்காய சாறு வழங்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு, வெங்காயச் சாறு எடுத்துக் கொண்ட நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவும் குறைந்துள்ளது என்றார்கள்.

வெங்காய ஜூஸ் செய்வது எப்படி? (Onion Juice)

* வெங்காய ஜூஸ் தயாரிக்க, இரண்டு வெங்காயம், 1 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை கல் உப்பு தேவைபடுகிறது. 

* இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதன் பிறகு இதை குடிக்கவும். 

* இந்த பானத்தை வடிகட்ட வேண்டாம். இதில் உள்ள நார்ச்சத்து நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

* வெங்காயத்தின் காரத்தை குறைக்க உப்பு உதவுகிறது. உப்பு வேண்டாம் என்றால், உப்பை தவிர்த்து சிறிது தேன் சேர்க்கவும்.

* இந்த பானம் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த விவரங்கள் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பதிவு உங்கள் தகவலுக்காக மட்டுமே. எந்தவொரு உடல்நலப் பிரச்சினைக்கும் சிறந்த வழி மருத்துவர்களை அணுகுவதுதான்.

Image Source: Freepik

Read Next

Okra Water Benefits: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெண்டைக்காய் தண்ணீர். எப்படி தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்