Sat Oct 17, 2026 | 09:05 AM IST

Amla For Diabetes: நெல்லிக்காயை இப்படி எடுத்துக்கிட்டா சுகர் பிரச்சனையே வராதாம்.!

Amla For Diabetes: நெல்லிக்காயை இப்படி எடுத்துக்கிட்டா சுகர் பிரச்சனையே வராதாம்.!Amla For Diabetes: நெல்லிக்காயை இப்படி எடுத்துக்கிட்டா சுகர் பிரச்சனையே வராதாம்.!

Amla Health Benefits For Diabetes: குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதில் பல்வேறு ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. குறிப்பாக குளிர்காலத்தில் நீரிழிவு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஆயுர்வேதத்தில் ஆம்லா பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட சிறந்த பழமாகும். இது பழங்காலத்தில் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல்லை குணப்படுத்துகிறது. இவை நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, காய்ச்சல் ஏற்படுவதைக் குறைக்கிறது. மேலும், நெல்லிக்காய் உண்பது ஆஸ்துமாவைப் போக்குகிறது, கண்களின் ஆரோக்கியத்திற்கு மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நெல்லிக்காய் பயன்படுத்தும் முறைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெண்டைக்காய் தண்ணீர். எப்படி தெரியுமா?

வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிடுவதற்கான வழிகள்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் நெல்லிக்காயை பின்வரும் வழிகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆம்லா சாறு

நெல்லிக்காய் அற்புதமான ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த பழமாகும். கூடுதலாக, ஆம்லாவில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை நாள் முழுவதும் உணவை நன்றாக செரிமானம் செய்ய உதவுகிறது. இதற்கு வெறும் வயிற்றில் நெல்லிக்காய் பொடியை ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்து வரலாம்.

ஆம்லா ஊறுகாய்

இது மிக எளிதாக செய்யக்கூடிய உணவாகும். ஆம்லா ஊறுகாயை சாதம் மற்றும் பராத்தா ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். சில பழங்களில் நெல்லிக்காய் கூழ் துண்டுகளை 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து, கறிவேப்பிலை, சிறிது உப்பு, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்துடன் கலந்து ஊறுகாய் செய்யலாம். இது செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Benefits: அரை கப் பீட்ரூட் துண்டு போதும். நீரிழிவு பிரச்சனையை ஈஸியா குறைக்கலாம்.!

ஆம்லா மிட்டாய்

உணவுக்கு பிறகு அல்லது எந்த நேரத்தில் இனிப்பு சுவை மிக்க ஆம்லா மிட்டாயை எடுத்துக் கொள்ளலாம். இது ஆரோக்கியமான மற்றும் விருப்பமான தேர்வாக அமைகிறது. இதற்கு நெல்லிக்காயைத் துண்டுகளாக வெட்டி வெயிலில் தேன் அல்லது சர்க்கரைபாகு சேர்த்து காயவைக்க வேண்டும். இது போதுமான அளவு காய்ந்ததும் மிட்டாய்களாக தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய் தூள்

நெல்லிக்காயைக் குறைந்த வெப்பநிலை அளவில் உலர்த்தி அதை அரைத்து நெல்லிக்காய் பவுடர் தயார் செய்யலாம். சந்தையிலும் இந்த ஆம்லா பொடி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் என நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

ஆம்லா முரப்பா

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வகையில் நெல்லிக்காயை இனிப்பு மற்றும் காரமான சுவையில் செய்து ஆம்லா முரப்பா தயார் செய்யப்படுகிறது. இது வெல்லம் சிரப்பில் செய்யலாம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் குரோமியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் மலச்சிக்கல்லைத் தடுக்கிறது.

மேலே கூறப்பட்ட வழிகளில் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cinnamon For Diabetes: சர்க்கரை நோயாளிகளே! இந்த பொக்கிஷத்தை மிஸ் பண்ணீடாதீங்க.

Image Source: Freepik

Read Next

→ Beetroot Benefits: அரை கப் பீட்ரூட் துண்டு போதும். நீரிழிவு பிரச்சனையை ஈஸியா குறைக்கலாம்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.