Cinnamon For Diabetes: சர்க்கரை நோயாளிகளே! இந்த பொக்கிஷத்தை மிஸ் பண்ணீடாதீங்க.

  • SHARE
  • FOLLOW
Cinnamon For Diabetes: சர்க்கரை நோயாளிகளே! இந்த பொக்கிஷத்தை மிஸ் பண்ணீடாதீங்க.


Cinnamon Benefits Of Blood Sugar: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்துவது என்பது இயலாது. எனினும் சில சாத்தியமான முறைகளைக் கையாள்வதன் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம். குறிப்பாக உணவுப்பொருளில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும்.

அந்த வகையில் இனிப்பு மற்றும் நறுமண மசாலாவாக விளங்கும் இலவங்கப்பட்டை நீரிழிவு நோயை நிர்வகிக்கும் நபர்களுக்கு சாத்தியமானதாக செயல்படுகிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது முதல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது வரை இலவங்கப்பட்டை உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவில் இது சுவையான கூடுதலாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Types 1 Diabetes: டைப் 1 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் இத ஃபாலோ பண்ணுங்க

இலவங்கப்பட்டை

மரத்தின் உட்புறப் பட்டையிலிருந்து பெறப்படும் சுவைமிக்க மசாலா வகையைச் சேர்ந்ததாகும். இவை உணவின் நறுமணத்திற்காக சமையலில் அறியப்பட்ட பொருளாகும். இலவங்கப்பட்டைகள் மரத்தின் பட்டையை உரித்து இயற்கையாகவே பெறப்பட்டு சுருண்ட வடிவில் கிடைக்கப்பெறுகிறது அல்லது நன்றாக தூள் தூளாக அரைக்கப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. ஒன்று சிலோன். இது உண்மையான இலவங்கபட்டை எனக் கூறப்படுகிறது. மற்றொன்று காசியா.

இலவங்கப்பட்டையின் சிறப்பியல்புகளான சுவை மற்றும் வாசனையானது சின்னமால்டிஹைடு என்ற அத்தியாவசிய எண்ணெய் மூலம் பெறப்படுகிறது. இதில் கால்சியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது. மேலும், இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

நீரிழிவு நோயாளிகளுக்கான இலவங்கப்பட்டை

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது. எந்தெந்த வழிகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை உதவுகிறது என்பது குறித்துக் காண்போம்.

இன்சுலின் உணர்திறனில்

இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இது இரத்த சர்க்கரையை குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க

பெரும்பாலும் நீரிழிவு நோய் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையதாகும். இதில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் இலவங்கப்பட்டை உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Insulin Leaf For Diabetes: இந்த இலையை தினமும் சாப்பிட்டால்… சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரையே தேவையில்ல!

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

நாள்பட்ட வீக்கம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவங்கப்பட்டையின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உதவுகின்றன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோய்களைத் தடுக்கும் தடுப்பானாகச் செயல்படுகிறது.

இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு

இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இவை இன்சுலின் செயல்பாட்டை பிரதிபலித்து, செல்கள் மூலம் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

இலவங்கப்பட்டை ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுப் பொருளாகும். இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. அடிக்கடி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை பொருத்தமானதாக அமையும்.

குறைக்கப்பட்ட இன்சுலின் எதிர்ப்பு

வகை 2 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் எதிர்ப்பு முக்கிய காரணியாக அமைகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு காரணியைக் குறைக்க இலவங்கப்பட்டை முக்கிய பங்களிக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Onion For Diabetes: வெங்காயத்த இப்படி எடுத்துக்கோங்க.. சர்க்கரை நோய் கட்டுப்படும்!

பிற ஆரோக்கிய நன்மைகள்

நீரிழிவு நோய் மேலாண்மைகளைத் தவிர, இன்னும் பிற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் விதமாக இலவங்கப்பட்டை உதவுகிறது.

அதன் படி, மூட்டு வலிக்கு நிவாரனம் அளிப்பது, ஈஸ்ட் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவது, அஜீரணத்தை எளிதாக்குவது, இரத்தம் உறைதலை ஒழுங்குபடுத்துதல், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும், இதன் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் லுகேமியா, லிம்போமா போன்ற செல்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. இதில் குறிப்பாக காசியா வகை இலவங்கப்பட்டையைக் காட்டிலும், சிலோன் இலவங்கப்பட்டை இந்த ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Diet: நீரழிவு நோயாளிகள் கவனத்திற்கு… பூசணிக்காயை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை கட்டுக்குள் வருமாம்!

Image Source: Freepik

Read Next

Insulin Leaf For Diabetes: இந்த இலையை தினமும் சாப்பிட்டால்… சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரையே தேவையில்ல!

Disclaimer