Raw Coconut Water: சுட்டெரிக்கும் வெயிலில் இந்த பானத்தை மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க

  • SHARE
  • FOLLOW
Raw Coconut Water: சுட்டெரிக்கும் வெயிலில் இந்த பானத்தை மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க

நீரேற்றமிக்க இளநீர்

இதில் அதிக எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. இளநீர் உடலுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய ஆற்றலை வழங்கும் சரியான நீரேற்ற தீர்வாகும். குறிப்பாக, தீவிர உடல் செயல்பாடுகளுக்குப் பின் உடல் இழந்த திரவங்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. அதன் படி, தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு இளநீர் அருந்துவது சிறந்த பானமாக அமைகிறது. கூடுதலாக, இதன் குறைந்தளவிலான கலோரி மற்றும் கொழுப்பற்ற தன்மை சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Seeds During Summer: வெயில்ல உடம்பு சூட்டைத் தணிக்க சாப்பிட வேண்டிய விதைகள்

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இளநீரில் அத்தியாவசிய வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதில் கணிசமான அளவு மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைக்க உதவுகிறது. கூடுதலாக, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தசை செயல்பாட்டை ஆதரிக்கவும் இளநீர் சிறந்த ஆதாரமாகும்.

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்திற்கு

தேங்காய் நீரில் நிறைந்துள்ள என்சைம்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரைப்பை, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இளநீரை வழக்கமாக எடுத்துக் கொள்வது உடலில் ஏற்படும் வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கிறது. இது இயற்கையான நீரேற்றத்தைத் தருவதுடன், நச்சு நீக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

இதய ஆரோக்கியத்திற்கு

தேங்காய் நீரில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம். இதன் எலக்ட்ரோலைட் சமநிலை மற்றும் குறைந்த சோடியம் நிறைந்ததாகும். இது இதய செயல்பாட்டை மேம்படுத்தி, இதய சுழற்சியை ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: எக்கச்சக்க நன்மைகளை அள்ளித் தரும் பூசணி விதை! எப்படி எடுத்துக்கொள்வது?

உடல் எடையை ஆதரிக்க

இளநீரின் இனிப்பான சுவை இருந்த போதிலும், பல பானங்களுடன் ஒப்பிடுகையில் தேங்காய் நீரில் கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைந்தளவு நிறைந்துள்ளது. இது சர்க்கரை சோடாக்கள், பழச்சாறுகளுக்கு ஈரப்பதமூட்டும் மற்றும் திருப்திகரமான மாற்றமாக அமைகிறது. இது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதுடன், பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

இளநீர் சைட்டோகினின்கள், தாவர ஹார்மோன்கள் போன்றவற்றின் நல்ல மூலமாகும். இது புற்றுநோயெதிர்ப்பு, வயதான எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அதிகரிப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. உடலில் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆற்றல் ஊக்கியாக

இதில் தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இது உடலின் ஆற்றல் அளவை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fat Burn Drinks: இடுப்பு மற்றும் வயிறு கொழுப்பு குறையணுமா.? சூப்பர் டிரிங்க்ஸ் இங்கே…

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த

இளநீரில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கத் தேவையான சிறந்த கனிமமாகும். பொட்டாசியம், சோடியத்தின் விளைவுகளை எதிர்க்கவும், இதய அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. தேங்காய் நீரை உட்கொள்வது ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்திற்கு

இளநீர் உடலின் உள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் சிறந்த நன்மைகளைத் தருகிறது. இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் வறண்ட, மந்தமான சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தின் எரிச்சலைத் தணித்து தெளிவான நிறத்தைத் தருகிறது.

ஹேங்கோவர் பிரச்சனைக்கு

அதிகம் குடிப்பதால் ஹேங் ஓவர் பிரச்சனை ஏற்படலாம். இது ஏற்றுக்கொள்ள முடியாத உடல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த எலக்ட்ரோலைட் நிறைந்த கலவை உடலை மீண்டும் ஹைட்ரேட் செய்ய ஏதுவாக அமைகிறது. இந்த சமயத்தில் இளநீரின் இயற்கையான சுவை மென்மையான ஆற்றலை ஊக்குவிக்கிறது. இது விரைவாக குணமடையவும், புத்துணர்ச்சியை அளிக்கவும் உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Empty Stomach Drinks: சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் வயிற்றில் ஜில்லுனு இந்த டிரிங்ஸ் குடிங்க

Image Source: Freepik

Read Next

World Liver Day: கீரை முதல் குயினோவா வரை… ஆரோக்கியமான கல்லீரலுக்கான உணவுகள் இங்கே…

Disclaimer