Coconut Vs Tender Coconut: இளநீர் vs தேங்காய் நீர், எது உடம்புக்கு நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Coconut Vs Tender Coconut: இளநீர் vs தேங்காய் நீர், எது உடம்புக்கு நல்லது தெரியுமா?

இதில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு தேங்காய் நீர் பெரிதும் உதவுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. அதே சமயம், இளநீரும் கோடைக்காலத்தில் அருந்தக்கூடிய சிறந்த பானமாகும். ஆனால், தேங்காய் மற்றும் இளநீர் ஆகிய இரண்டில் எது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது குறித்துத் தெரியுமா?

தேங்காய் மற்றும் இளநீர்

வழக்கமான ஓடு தேங்காய் ஆனது முதிர்ச்சியடைந்ததாகவும் மற்றும் உள்ளே கடினமான சதை மற்றும் தண்ணீரையும் கொண்டிருக்கும். ஆனால், இளநீரானது ஆரம்ப நிலையிலேயே அறுவடை செய்யப்படுகிறது. மேலும், இது பழுக்காததாகவும், இளம் தேங்காய் என்றும் கூறப்படுகிறது. இவை இரண்டிற்கும் உள்ள சில வேறுபாடுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Summer Drink: வெயில் காலத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க இந்த பானத்தை குடியுங்க!

தேங்காய் மற்றும் இளநீருக்கு இடையேயான வேறுபாடுகள்

தண்ணீர் அளவு

வழக்கமான தேங்காயுடன் ஒப்பிடுகையில் இளநீரில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. இது அதிக நீரேற்றத்துடன் இனிப்பு சுவையைத் தருகிறது. அதே சமயம் வழக்கமான தேங்காயில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இது நுட்பமான சுவை கொண்டதாகும்.

கொழுப்பு உள்ளடக்கம்

இளநீரை முதிர்ச்சியடைவதற்கு முன்னதாக அறுவடை செய்வதால் இதில் கொழுப்பு உள்ளடக்கம் சற்று குறைவாகவே காணப்படும். அதே சமயம் தேங்காய் சதையில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது. இது எடை குறைப்பவர்களுக்கு மோசமான தேர்வாக அமையலாம்.

கலோரிகள் ஒப்பீடு

வழக்கமான தேங்காயில் உள்ள அதிக நிறைவுற்ற கொழுப்பு காரணமாக, இதில் அதிக கலோரிகளும் நிறைந்திருக்கும். அதே போல இளநீரில் குறைவான கலோரிகளே நிறைந்துள்ளன.

எலக்ட்ரோலைட்டுகள்

சாதாரண தேங்காயுடன் ஒப்பிடுகையில் இளநீர் அதிக சத்து மிக்கதாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும் அமையும். ஏனெனில் இதில் இயற்கையாகவே பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. இது உடல் செயல்பாட்டிற்குப் பிறகு நீரேற்றம் மிகுந்ததாகவும், முழு உணர்வைத் தருவதாகவும் அமைகிறது. மேலும் தேங்காய் நீரில் சோடியம், வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பினும் குறைந்தளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களே உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Empty Stomach Papaya Benefits: தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

நார்ச்சத்துக்கள் நிறைந்த

இளநீரை விட சாதாரண தேங்காயில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இயற்கையாகவே நார்ச்சத்து பெற விரும்புபவர்களுக்கு தேங்காய் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

செரிமானத்தை எளிதாக்க

இளநீரின் சதை மென்மையாகவும், அடர்த்தியான மற்றும் கிரீமி அமைப்பைக் கொண்டுள்ளதால், இது எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. அதே போல, தேங்காயில் சதை கடினமானதாக இருப்பதுடன், அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் இது செரிமானம் அடைய அதிக நேரம் தேவைப்படுகிறது.

தேங்காய் Vs இளநீர் - எது ஆரோக்கியமானது?

இளநீர் குறைந்தளவு கலோரி, கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது. எனவே இளநீர் பெரும்பாலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இதனுடன் இளநீர் நீரேற்றமானதாக இருப்பதால் இது உடற்பயிற்சிக்கு பின் குடிக்க வேண்டிய பானங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் தேங்காயில் அதிக சதை மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது சமையலில் சேர்க்கவும், எண்ணெய் பிரித்தலுக்கும் சிறந்த தேர்வாகும். எனினும் இளநீருடன் ஒப்பிடுகையில் இது குறைவான ஆரோக்கியத்தையே தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Calcium Foods: மீனைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Oily Food: எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பின் மறக்காமல் இதை செய்யுங்க!!

Disclaimer