Calcium Foods: மீனைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Calcium Foods: மீனைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகள் என்னென்ன தெரியுமா?


மீனில் உள்ள கால்சியம்

கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது மீன் ஆகும். ஆய்விகளின் படி, 100 கிராம் மீனில் 15 மில்லிகிராம் அளவில் கால்சியம் நிறைந்துள்ளது. ஆனால் சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் கால்சியம் சத்து கிடைக்க என்ன சாப்பிடுவது என குழப்பம் அடைகின்றனர். இதில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ள சைவ உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Melatonin Rich Foods: நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த ஐந்து உணவுகளைத் தவற விட்ராதீங்க.

அதிக கால்சியம் நிறைந்த சைவ உணவுகள்

பாதாம்

100 கிராம் அளவிலான பாதாமில் 254 மில்லிகிராம் அளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. அன்றாட வாழ்வில் பாதாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை நேரடியாகவும், ஊறவைத்தும் எடுத்துக் கொள்ளலாம். பாதாம் பாலாக அருந்தலாம். மேலும் சாலட் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

எள் விதைகள்

எள் விதைகள் கால்சியம் சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். 100 கிராம் அளவிலான எள் விதைகளில் 975 மில்லிகிராம் அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. சாலட் தயார் செய்யும் போது அதன் மேற்பரப்பில் சேர்க்கலாம். வறுக்கப்பட்ட எள் விதைகளை லட்டு மற்றும் அல்வா போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

டோஃபு

பன்னீரைப் போன்ற உணவுப் பொருளான டோஃபு கால்சியம் நிறைந்ததாகும். அதன் படி, 100 கிராம் அளவிலான டோஃபுவில் 680 மில்லி கிராம் அளவு கால்சியம் உள்ளது. இதை காட்டேஜ் சீஸ்-க்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். இதை நேரடியாகவோ அல்லது பிற காய்கறிகளுடன் சேர்த்து உண்ணலாம்.

சியா விதைகள்

100 கிராம் சியா விதைகளில் 456 - 631 மில்லிகிராம் அளவு சியா விதைகள் உள்ளது. சியா விதைகள் ஊறவைத்த தண்ணீரைக் குடிக்கலாம். புரோட்டீன் பவுடர், ஓட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Empty Stomach Papaya Benefits: தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

அத்திப்பழம்

அத்திப்பழம் கால்சியம் சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். 100 கிராம் அளவு அத்திப்பழத்தில் 162 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது நேரடியாக அப்படியே சாப்பிடலாம். உலர்ந்த அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

சுண்டல்

ஒரு கப் அளவிலான சுண்டலில் 420 மில்லி கிராம் அளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை காய்கறி கூட்டுகளுடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அவித்த சுண்டலாக சாப்பிடலாம்.

புளிக்காத தயிர்

ஒரு கப் அளவு புளிக்காத தயிரில் சுமார் 300 முதல் 350 மில்லிகிராம் அளவிலான கால்சியம் சத்துக்கள் காணப்படுகிறது. இதை காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் நறுக்கிய பழங்கள், நட்ஸ் போன்றவை சேர்த்து உண்ணலாம்.

இந்த உணவுகள் அனைத்தும் அதிக கால்சியம் சத்துக்கள் நிறைந்த சைவ உணவு வகைகளாகும். இதை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Heat Stroke: கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதை செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

Sprouts for Breakfast: முளைகட்டிய தானியங்களை காலை உணவாக சாப்பிடுவது நல்லதா?

Disclaimer