Foods good for calcium absorption: ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஆனால், இன்றைய காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையின் காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதிலும் குறிப்பாக, முதுமையில் வரக்கூடிய பிரச்சனைகள் பெரும்பாலும் இளம் வயதிலேயே சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அவ்வாறு இளம் வயதில் இன்று பலரும் சந்திக்கக் கூடிய ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மூட்டு வலி, எலும்பு பலவீனம் உள்ளிட்டவை அடங்கும்.
இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமையே ஆகும். இதனால், பெரும்பாலானோர் சிறு வயது முதலே எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள் அவசியமாகும். ஆனால், அவர்கள் பெரும்பாலானோர் பால் அருந்துவதன் மூலம் இந்த ஊட்டச்சத்தை பெறலாம் என நினைக்கின்றனர். உண்மையில், இது அவர்களுக்கு போதுமானதாக இருக்குமா என்று யோசித்திருக்கிறீர்களா?
இந்த பதிவும் உதவலாம்: இரும்பு போல வலுவான எலும்பு வேணுமா? மருத்துவர் சொல்லும் குறிப்புகள் இதோ!
50 வயது மேற்பட்டவர்களுக்கு பால் குடித்தால் மட்டும் போதுமா?
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பதிவில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “50 வயதிற்குப் பிறகும், பெற்றோருக்கு கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கிறீர்களா?. அது போதாது. பால் குடித்த பிறகும் கூட, அவர்கள் இன்னும் மூட்டு வலி, முதுகுவலி அல்லது சோர்வுடன் போராடினால், அது அவர்களுக்கு எவ்வளவு கால்சியம் கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. ஆனால், அவர்களின் உடல் அதை எவ்வளவு நன்றாக உறிஞ்சுகிறது என்பதுதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
மேலும் அவரின் கூற்றுப்படி, வயதாகும்போது, எலும்புகளை அடைய கால்சியத்திற்கு பிற ஊட்டச்சத்துக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
வைட்டமின் டி (சூரிய ஒளி, காளான்கள், கொழுப்பு நிறைந்த மீன்)
மெக்னீசியம் (பாதாம், பூசணி விதைகள், கீரை)
வைட்டமின் K2 (புளித்த உணவுகள், சீஸ்)
குடல் உறிஞ்சுதலை அதிகரிக்க ப்ரீபயாடிக்குகள் (பூண்டு, வெங்காயம், லீக்ஸ்)
எலும்புகள் வலுவாவது என்பது வெறும் மாத்திரைகளால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. இவை ஒன்றாக வேலை செய்ய சரியான உணவுகள் தேவைப்படுகிறது. அதனால் தான், இயற்கையாகவே கால்சியம் உறிஞ்சுதலை ஆதரிக்கும் அன்றாட உணவுகளுடன் கூடிய எளிய வழிகாட்டியை நிபுணர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ”வயதாகும் போது எலும்பு அடர்த்தி மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக, பால் பொருட்கள் நீண்ட காலமாக முதன்மை கால்சியம் மூலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், உகந்த கால்சியம் உறிஞ்சுதலுக்கு வேறு சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் செரிமான காரணிகளைப் பொறுத்ததாகும். குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு முக்கியமானதாகும்” என்று கூறியுள்ளார்.
வைட்டமின் டி
இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு கனிமமயமாக்கலுக்கு இன்றியமையாததாகும்.
சால்மன், காளான்கள், காட் லிவர் எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், குறிப்பாக புற ஊதா வெளிப்படும் வகைகள் ஒரு நல்ல வழியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Bone Health: உங்க எலும்பு இரும்பு போல ஆகணுமா? அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க!
மக்னீசியம்
மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் டி வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் அனைத்து நொதிகளுக்கும் ஒரு துணை காரணியாகும். போதுமான மக்னீசியம் இல்லாமல், உடல் வைட்டமின் டி ஐ சரியாகப் பயன்படுத்த முடியாது. இதனால், இது எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பேட் மற்றும் கால்சியம் சமநிலையைத் தடுக்கிறது.
மக்னீசியம் நிறைந்த உணவுகளில் சியா விதைகள், பூசணி விதைகள், கீரை மற்றும் பாதாம் போன்றவை அடங்கும்.
ப்ரீபயாடிக்குகள்
வெங்காயம், பூண்டு மற்றும் சோயாபீன்ஸ் போன்றவற்றில் காணப்படும் இன்யூலின் போன்றவை கனிம உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், குடல் நுண்ணுயிரியை மாற்றியமைப்பதன் மூலமும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.
வைட்டமின் K2
இது ஆஸ்டியோகால்சினை செயல்படுத்துகிறது. இவை கால்சியத்தை எலும்பு மேட்ரிக்ஸுடன் பிணைக்கக்கூடிய ஒரு புரதமாகும். மேலும் இது தமனிகளில் கால்சியம் குவிவதைத் தடுக்கிறது. கே2 ஊட்டச்சத்துக்கள் இல்லாமல், கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக மென்மையான திசுக்களில் சேரக்கூடும்.
கே2 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் டௌச்சி போன்ற புளிக்கவைக்கப்பட்ட சோயா பொருட்கள் அடங்கும். இதில் மெனாகுவினோன்-7 (MK-7) உள்ளது. இது பேசிலஸ் இனங்களின் செயல்பாட்டின் காரணமாக சிறந்த கால்சியம் வளர்சிதை மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, வைட்டமின் D, மெக்னீசியம், K2 மற்றும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்த உணவுடன், மிதமான ஆரோக்கியமான கொழுப்பு உட்கொள்ளலை இணைப்பது கால்சியம் உறிஞ்சுதலை பெரிதும் மேம்படுத்துகிறது. குறிப்பாக, 50 வயதுக்குப் பிறகு, பால் பொருட்களைத் தாண்டி எலும்பு ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: ஒரு கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் கொண்ட டாப் 5 உணவுகளின் பட்டியல் இதோ...!
Image Source: Freepik