Which fruit has highest calcium: அன்றாட உணவில் பல்வேறு ஆரோக்கியமிக்க காய்கறிகள், பழங்கள், விதைகள், பானங்களை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். அவ்வாறு எலும்பு ஆரோக்கியம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் உதவுகிறது. அவ்வாறே, சிறு குழந்தைகள் தேவையான கால்சியம் ஊட்டச்சத்துக்களைப் பெற தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கச் சொல்கின்றனர். ஆனால், இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் நல்லது. அதாவது சிறியவர்கள், பெரியவர்கள் என எவராக இருப்பினும், உடலுக்குக் கால்சியம் தொடர்ந்து தேவைப்படுகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எலும்புகளை பலவீனப்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்கவும் உதவுகிறது. கால்சியம் ஊட்டச்சத்துக்கள் பெரும்பலும் பால் மற்றும் பிற பால் உணவுகளில் இருப்பதாகவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் பால் அருந்துவதில் குறைந்த ஆர்வத்தையே கொண்டுள்ளனர். கவலை வேண்டாம். உண்மையில் பால் பொருள்களைத் தவிர சில பழங்களும் கால்சியம் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கால்சியம் நிறைந்த பழங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Calcium Foods: மீனைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகள் என்னென்ன தெரியுமா?
கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள்
அத்திப்பழங்கள்
பொதுவாக கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாக அத்திப்பழம் அமைகிறது. இது நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்ததாகும். அரை கப் அத்திப்பழத்தில் சுமார் 180 மி.கி கால்சியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
பப்பாளி
பப்பாளி கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பப்பாளியை உட்கொள்வது தொற்றுநோய்களைத் தடுத்து எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
ராஸ்பெர்ரி
கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பெர்ரி பழங்களில் ராஸ்பெர்ரிகளும் அடங்கும். அரை கப் ராஸ்பெர்ரியில் சுமார் 32 மி.கி கால்சியம் சத்துக்கள் உள்ளது. ராஸ்பெர்ரியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பழங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது.
ப்ளாக்பெர்ரிகள்
கால்சியம் நிறைந்த பழங்களில் ப்ளாக்பெர்ரிகளும் அடங்கும். இதில் கால்சியம் தவிர, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை ஊக்குவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Calcium Rich Foods: பாலை விட அதிக கால்சியம் நிறைந்த உணவுகள் இங்கே.
ஆரஞ்சு
இதில் வைட்டமின் சியைத் தவிர, கால்சியம் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. அதே வேளையில், சாதாரண தசை செயல்பாட்டை பராமரிப்பதிலும் ஆரஞ்சு முக்கிய பங்கு வகிக்கிறது.
கிவி
வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக விளங்கும், கிவி பழம் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி இருப்பதால், இவை சரும ஆரோக்கியத்தையும் கொலாஜன் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
கோஜி பெர்ரி
இதில் நல்ல கண் ஆரோக்கியத்திற்கு உதவும் தேவையான ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. மேலும், இதில் நிறைந்த கால்சியம் ஊட்டச்சத்துக்கள் வலுவான எலும்புகளுக்கு பங்களிக்கிறது. கோஜி பெர்ரிகளில் நிறைந்த கால்சியம் சத்துக்களுடன், வைட்டமின் சி, இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளது.
ஆப்ரிகாட் பழங்கள்
ஆப்ரிகாட் பழமானது வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இது கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இந்தப் பழம் நல்ல கண் பார்வையை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில், இது வலுவான எலும்புகளைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Drinks for healthy bones: இரும்பு போல ஸ்ட்ராங்கான எலும்பு வேணுமா? தினமும் காலையில் இந்த ட்ரிங்ஸ் குடிங்க
Image Source: Freepik