Melatonin Rich Foods For Sleep: நல்ல இரவு தூக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் இரவு தூக்கத்தை பலரும் தவிர்க்கின்றனர். இது பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இந்த தூக்க பராமரிப்பில் மெலடோனின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.
மெலடோனின் என்பது மூளையில் உள்ள பினியல் சுரப்பியில் இயற்கையாக உற்பத்தியாகக் கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். இது தூக்க சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஹார்மோன் சூரியனின் மறைவுக்குப் பின் பினியல் சுரப்பியில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே சமயம், பகல் நேரத்தில் இதன் அளவு குறைகிறது. மெலடோனின் இயற்கையாகவே உற்பத்தி ஆகக்கூடிய ஒன்றாக இருப்பினும், சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dry Coconut Benefits: கேன்சர் தீர்வு முதல் இதய ஆரோக்கியம் வரை… உலர் தேங்காய் நன்மைகள் இங்கே…
மெலடோனின் அதிகம் நிறைந்த உணவுகள்
இந்த மெலடோனின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தைத் தருகிறது.
பால்
இரவு தூங்கும் முன்பாக ஒரு கிளாஸ் பால் அருந்துவது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. ஏனெனில், இது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களைத் தவிர, மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தலாம்.
நட்ஸ்
இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆற்றல் மிகுந்த மூலமாகும். குறிப்பாக பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட்ஸ் போன்றவை மெலடோனினைக் கொண்டுள்ளது. எனவே ஆரோக்கியமான தின்பண்டங்களுடன் இந்த நட்ஸ் வகைகளைச் சேர்த்துக் கொள்வது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
மீன்
சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்களாகும். இது மெலடோனின் நிறைந்த நல்ல மூலங்களாகும். இந்த மீன்களில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதை வாரத்திற்கு சில முறை உட்கொள்வது நன்றாக தூங்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Custard Apple Myths: இந்த 4 பிரச்சனை இருப்பவர்கள்… சீதாப்பழம் சாப்பிடலாமா?
செர்ரிஸ்
மெலடோனின் உள்ள இயற்கையான உணவு ஆதாரங்களில் செர்ரி வகைகளும் ஒன்று. இதில் பொட்டாசியம், வைட்டமின் சி, தாமிரம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செர்ரிகளை நேரடியாக சாப்பிடுவது அல்லது சாறாக அருந்துவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன், நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
முட்டை
இதில் புரதங்கள் மற்றும் இன்னும் பிற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது மெலடோனின் நிறைந்த சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். முட்டைகளை எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தைத் தருகிறது. எனவே, காலை நேரத்தில் சில முட்டைகளை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
இது போன்ற மெலடோனின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைப் பெற உதவுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Raw Garlic Side Effects: பச்சை பூண்டு சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா.?
Image Source: Freepik