Side Effects Of Eating Raw Garlic: பூண்டில் இயற்கையான ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சில பிரச்னைகள் ஏற்படலாம். பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.

நெஞ்செரிச்சல்
ஹார்ட் பர்ன் காஸ்ட்ரோசோபேஜியல் ரிஃப்ளக்ஸ் டிசீஸ் (ஜி.இ.ஆர்.டி.) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி உணவில் பூண்டைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பூண்டை உட்கொள்வதால் நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். பூண்டின் அமில பண்புகள் அமில வீக்கத்தை மோசமாக்குவதாக கூறப்படுகிறது.
கல்லீரல் பிரச்னை
பூண்டை அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லீரல் பிரச்னையை உண்டாக்கும். உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் இரத்தம் கசியும் அபாயம் அதிகம். ஏனெனில் பூண்டில் உள்ள ஆன்டித்ரோம்போடிக் பண்புகள் இரத்த உறைதலை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன் தினமும் 4 பல் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு இரத்தப்போக்கு அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வாய் துர்நாற்றம்
பூண்டில் சல்பர் கலவைகள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், இவற்றை அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். தினமும் காலையில் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செரிமான பிரச்னைகள்
பூண்டில் ஃப்ரக்டான்ஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நேரடியாக பெருங்குடலுக்குள் செல்வதால், வயிற்று உப்புசம், வாயு, வயிற்று வலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் தான் ஒரு நாளைக்கு 2 பல் பூண்டு சாப்பிட்டால் போதுமானது.
Image Source: Freepik