Banana Side Effects: வாழைப்பழம் நல்லது தான்… ஆனால் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Banana Side Effects: வாழைப்பழம் நல்லது தான்… ஆனால் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?


Side Effects Of Over Eating Bananas: வாழைப்பழம் என்பது சீசன் பாராமல் எல்லாக் காலங்களிலும் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பழமாகும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. 

ஆனால், இந்தப் பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் பாதிப்புகள் ஏற்படும். ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்கள் உட்கொள்ள வேண்டும்? அதிகம் சாப்பிட்டால் என்ன மாதிரியான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்? என்பதை இங்கே காண்போம். 

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்கள் உட்கொள்ள வேண்டும்?

வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு குறையும் என்று தெரியவந்துள்ளது. வாழைப்பழங்கள் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் செரிமானம் தொடர்பான கிரோன் நோயைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.

வாழைப்பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், மிதமான நுகர்வு மிகவும் முக்கியமானது. பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது. இருப்பினும், கடுமையான உடல் உழைப்பு அல்லது வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், இழந்த ஆற்றலை மீண்டும் பெற தினமும் மூன்று வாழைப்பழங்களை உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: Banana On Empty Stomach: வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? அதை எப்படி சாப்பிடலாம்?

அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள்..

வாழைப்பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது சில உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அவை இங்கே..

* வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவது பல் சொத்தையை ஏற்படுத்தும். குறிப்பாக இதில் உள்ள மாவுச்சத்து சாப்பிடும் போது பற்களுக்கு இடையே எளிதில் ஒட்டிக் கொள்ளும். எனவே வாழைப்பழம் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் பல் துலக்குவது.

* வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. எனவே இவற்றை அதிகமாக உட்கொள்வதால் நரம்புகள் பாதிக்கப்படும். 

* குறிப்பாக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட்டால், விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

* பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது. எனவே, இவற்றை அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்றுவலி மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படும்.

* வாழைப்பழத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இவற்றை உட்கொள்ள வேண்டும்.

* சிறுநீரகம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பழத்தை முடிந்தவரை குறைத்து கொள்வது நல்லது. ஏனெனில் அவற்றில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழங்களை சாப்பிடக்கூடாது.

Image Source: Freepik

Read Next

Immunity Boosting Foods: இந்த உணவுகள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.!

Disclaimer

குறிச்சொற்கள்