Side effects of eating too much milk: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். இந்த வரிசையில், முக்கியமானதாக அமைவது பால் குடிப்பது அடங்கும். பொதுவாக, பிறந்த முதல் 6 மாதங்களுக்கு குழந்தை தாயின் பால் மட்டுமே குடிப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயத்தில், வளரும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது, அவர்களின் சிறந்த வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.
பால் அருந்துவது வலுவான எலும்புகள், சிறந்த ஆரோக்கியம் மற்றும் வயதானவர்களின் தசை மீட்புக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இது போன்ற நன்மைகளைப் பெற விரும்புபவர்கள், பாலின் நன்மைகளை அறிந்து அதை வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குடிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், அதிகளவு பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற சூழ்நிலையில் அதிகமாக பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Excess Drinking Milk: அதிகம் பால் குடிப்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் வரலாம்
அதிகமாக பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
சளி மற்றும் இருமல் பிரச்சனை
ஆயுர்வேதத்தின்படி, பால் குளிர்ச்சியான விளைவைக் கொண்டதாகும். எனவே அதிகளவு குளிர்ந்த பால் குடிப்பது அல்லது இரவில் பால் குடிப்பது சளி, தொண்டை வலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. பால் ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளைக் கொண்டவர்கள் குறிப்பாக, அதிகம் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் குளிர்ச்சி விளைவுகளைக் குறைப்பதற்கு இஞ்சி, மஞ்சள் அல்லது இலவங்கப்பட்டையை அதில் சேர்க்க முயற்சிக்கலாம்.
செரிமான பிரச்சனைகள்
அதிகளவு பால் குடிப்பது சிலருக்கு வாயு, வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஒருவருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லை என்றால் அவர்களின் உடலில் லாக்டேஸ் நொதியின் பற்றாக்குறை இருந்தால், பால் குடித்த பிறகு வாயு, வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இந்த சூழ்நிலையில், லாக்டோஸ் இல்லாத பால் அல்லது பாதாம் அல்லது சோயா பால் போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய பால் குடிக்கலாம்.
இதய ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவு
பால், குறிப்பாக முழு கொழுப்புள்ளதாக இருப்பின், அதில் அதிக கொழுப்பு இருப்பதைக் குறிக்கிறது. அதிகளவு முழு கொழுப்புள்ள பாலை தொடர்ந்து குடிப்பதன் காரணமாக உடலில் LDL அல்லது கெட்ட கொழுப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். இது இதய நோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப்பு நீக்கிய பாலை குறைந்த அளவில் குடிக்க வேண்டும்.
சருமம் மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் விளைவுகள்
அதிகளவு பால் பொருட்கள் அல்லது பால் அருந்துவது சருமம் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இவை சருமத்தில் முகப்பரு பிரச்சனையை அதிகரிக்கக்கூடும். பாலில் உள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டுகிறது. இது பருக்களை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?
அதிகப்படியான சிறுநீர் கழித்தல் பிரச்சனை
பாலில் உள்ள புரதங்கள் மற்றும் பிற தாதுக்கள் உடலில் டையூரிடிக் விளைவை ஏற்படுத்தக்கூடும். எனவே பகலில் அதிகம் பால் குடிப்பது உடலில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவை உடலில் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். குறிப்பாக, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது இந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆயுர்வேதத்தின்படி ஒருவர் எப்போது பால் குடிக்கலாம்?
ஆயுர்வேதத்தின்படி, பால் எந்த அளவு எடுத்துக் கொள்கிறோமோ, அதே வேளை எப்போது குடிக்கிறோம் என்பதும் முக்கியமானதாகும். ஏனெனில், பால் குடிக்கும்போது அது உடலைப் பாதிக்கலாம்.
- காலை நேரத்தில் பால் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. ஆனால், வெறும் வயிற்றில் குளிர்ந்த பால் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- இரவு நேரத்தில் வெதுவெதுப்பான பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இதில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், உணவு உட்கொண்ட உடனேயே பால் அருந்துவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முடிவு
பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். ஆனால், இதை சரியான நேரம் மற்றும் சீரான அளவில் உட்கொள்வது முக்கியமாகும். அதன் படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் பால் குடிக்கும் போது, உடல் அதை சரியாக ஜீரணிக்க முடிந்தால், அது நன்மை தரும். ஆனால், அதிகமாக பால் குடித்து, அதன் பிறகு உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டால், உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது முக்கியம்.
இந்த பதிவும் உதவலாம்: Milk Side Effects: அதிகமாக பால் குடிப்பவரா நீங்கள்.? ஆபத்தில் உள்ளீர்.!
Image Source: Freepik