Side Effects Of Drinking More Milk: அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்றே கூறுவர். இதற்கு பால் மட்டும் விதிவிலக்கா என்ன. பால் அருந்துவது உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அதிகமாக அருந்துவதால் உடலுக்கு பல்வேறு மோசமான விளைவுகளையும் தரக்கூடியதாக அமைகிறது. பாலில் உள்ள கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலுக்கு வலுவான எலும்புகள் மற்றும் இன்னும் பிற நன்மைகளைத் தருகிறது.
அதிகளவு பால் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
ஆரோக்கியமான மற்றும் சத்து மிகுந்த பால் உடல் நலத்திற்கு நன்மை தருவதாக அமைகிறது. இருப்பினும், அதிகமாக அருந்துவது சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்காது. அதிகமாக பால் அருந்துவது எலும்பு முறிவு மற்றும் இறப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இதில் அதிகப்படியான பால் அளவு என்பது ஒரு நாளைக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட கிளாஸ்களைக் குறிக்கிறது. இப்போது அதிகளவு பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் காணலாம்.
பெண்களுக்கு ஆபத்து
ஆய்வு ஒன்றில், பெண்கள் அதிக அளவிலான பால் குடிப்பது இறப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், ஒரு கிளாஸுக்கு குறைவாக இருப்பவர்களை ஒப்பிடும் போது, அதிக அளவு குடிப்பவர்களுக்கு இறப்பு அபாயம் இரட்டிப்பாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு பால் அருந்தவே கூடாது என்று குறிக்கப்படவில்லை. பாலில் ஏராளமான அத்தியாவசியமான சத்துக்கள் இருப்பதால், குறிப்பிட்ட அளவிலான பாலை உட்கொள்வது நல்லது. குறிப்பாக, ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் என்ற வீதத்தில் பால் குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Raw Milk : பாலை காய்ச்சாமல் குடிப்பது நல்லதா? கெட்டதா?
அதிகளவு பால் குடிப்பதால் ஏற்படும் மற்ற விளைவுகள்
ஆரோக்கியமிக்க பாலை, எப்போதும் மிதமாக உட்கொள்வது சிறப்பு. அதிகமாக பாலை அருந்துவதால் ஏற்படும் சில தெளிவான அறிகுறிகளைக் காணலாம்.
வீக்கம்
பால் வீக்கம், செரிமானப் பிரச்சனைகளுக்குத் தூண்டக்கூடிய ஒன்றாகும். லாக்டோஸ் எடுத்துக் கொள்வதால் அதிகப்படியான பால் வீக்கம் உண்டாகும். இது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப் போக்கிற்கு வழிவகுப்பதாக அமைகிறது.
முகப்பரு
அதிகளவிலான பால் அருந்துவது முகப்பருக்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. முழு கொழுப்பு மிகுந்த பால் பொருள்களை உட்கொள்வதால், முகப்பருக்கள் ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சோர்வு
ஆய்வு ஒன்றில் அதிக அளவிலான பால் அருந்துவது குடல் கசிவுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடலை சோர்வாக வைத்திருக்கும். மேலும், பாலில் ஏ1 கேசீன் உள்ளது. இது குடல் புறணிப்பகுதியில் அழற்சி விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Milk Protein Powder Benefits: பாலுடன் புரோட்டீன் பவுடர் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
Image Source: Freepik