$
உடலுக்கு ஆரோக்கியம் தரும் புரதச்சத்துக்களை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். சைவ உணவுக்காரர்களுக்கு ஏற்ற வகையில் புரோட்டீன் பவுடர் மற்றும் ஷேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, மோரிலிருந்து பெறப்படும் மோர் புரதம் ஆனது இயற்கை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அதாவது, பாலாடைக்கட்டி உற்பத்தியில் எஞ்சியிருக்கக் கூடிய பாலின் திரவ பகுதியே மோர் புரதம் ஆகும். இதில், ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது.
புரோட்டீன் பவுடர்
உடலில் தசைகளை உருவாக்குவதில் புரதம் தேவைப்படுகிறது. இது உடலுக்குத் தேவையான சத்தான ஒன்றாகும். எனவே, தினசரி அளவில் புரோட்டீன்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளைத் தரும். ஆனால், சிலரால் புரதத்தை தினந்தோறும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எனவே புரோட்டீன் பவுடராக பயன்படுத்துகின்றனர். இது கடைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த புரோட்டீன் பவுடரை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். புரோட்டீன் பவுடரை பாலில் கலந்து குடிக்கும் முறை மற்றும் நன்மைகளைக் காணலாம்.
புரோட்டீன் பவுடரை சூடான பாலில் கலக்கலாமா?
பல வகைகளில் புரோட்டீன் பவுடர்கள் கிடைக்கின்றன. இவற்றை சூடான பாலில் கலந்து குடிக்கக் கூடாது. சூடான பாலில் புரோட்டீன் பவுடர் கலக்கும் போது, அது புரத நிலையை குலைத்து விடும். எனினும், தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரோட்டீன் பவுடரை பாலுடன் சேர்த்து குடிப்பதால் நிறைய நன்மைகள் உள்ளன. பாலில் உள்ள கொழுப்பு காரணமாக மெதுவாக செரிமானம் அடையும். இதனால், இது நீண்ட நேரத்திற்கு பசி எடுப்பதைத் தடுக்கிறது.
பாலுடன் புரோட்டீன் பவுடர் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினசரி உணவில் புரோட்டீன் பவுடர் சேர்த்து அருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு பாலில் சேர்த்து குடிக்கும் போது, வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். காலையில் புரோட்டீன் பவுடருடன் கலந்து பால் குடிப்பதால், உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இது உடலில் தசை அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
எடை மேலாண்மை
புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலின் எடையைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் கொழுப்பு போன்ற ஆபத்துக்களில் இருந்தும் விடுபடலாம் எனக் கூறப்படுகிறது.
தசை வளர்ச்சிக்கு
புரோட்டீன் ஷேக்குகள் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எடை தூக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நபர்களுக்கு புரோட்டீன் ஷேக்குகள் மிகவும் உதவியாக உள்ளது. இது தசை அளவு மற்றும் வலிமையை கணிசமாக மேம்படுத்துகிறது.
செரிமானத்தை மெதுவாக்க
பால் புரோட்டீன் சேக் ஆனது முக்கியமான கேசீன் புரதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது புரதத்தை ஜீரணிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாகவே, அமினோ அமிலங்கள் நிலையான மற்றும் மெதுவான விகிதத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!!