$
When To Take Protein Powder Before Or After Workout: புரோட்டீன் நமது உடலுக்கு முக்கியமான மேக்ரோனூட்ரியன்களில் ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான பல அமினோ அமிலங்களால் ஆனது, அவை உடலின் கட்டுமானத் தொகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆரோக்கியமாக இருக்க, நமது உணவில் இருந்து போதுமான புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. பாடிபில்டிங் செய்பவர்களுக்கும் புரதம் மிகவும் அவசியம்.
ஏனெனில், இது உடற்பயிற்சியின் பின்னர் உடல் மற்றும் தசைகளை மீட்க உதவுகிறது. கூடுதலாக, இது தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆனால் பலருக்கு உணவில் இருந்து தினசரி புரதத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இந்நிலையில், அவர்கள் புரோட்டீன் பவுடர் சப்ளிமெண்ட்ஸ்களை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தற்போது புரோட்டீன் பவுடர் உட்கொள்வது குறித்து மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss: வெறும் 7 நாளில் தொப்பை குறைய இந்த பானத்தை தினமும் குடியுங்க!!
உடற்பயிற்சிக்குப் பிறகு உடலை நன்றாக மீட்டெடுக்கவும், தசைகளை அதிகரிக்கவும் புரோட்டீன் பவுடர் எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் புரோட்டீன் பவுடரை குடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் பயிற்சிக்குப் பிறகு அதை உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் என்று கூறுகிறார்கள்.
உண்மையில், புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? அதை எப்படி சாப்பிடணும்? என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
புரோட்டீன் பவுடர் சாப்பிட சரியான நேரம் எது?

பாடிபில்டிங் செய்பவர்களுக்கு புரதம் மிகவும் அவசியமானது என்பது உண்மைதான். அது மட்டும் அல்ல, அவர்களின் தினசரி புரதத் தேவையும் அதிகமாக உள்ளது. உங்கள் உணவில் இருந்து 70-80% புரத தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்ய, நீங்கள் சப்ளிமெண்ட்ஸ்களை எடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!
ரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க சரியான நேரம் குறித்து பேசினால், நீங்கள் எந்த நேரத்தில் புரதத்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்பதுதான் உண்மை. உடல் மீட்புக்கு உங்கள் தினசரி புரதத் தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். புரதத் தேவையை நீங்கள் பூர்த்தி செய்யாவிட்டால், தசை சேதத்தை ஏற்படுத்தும்.
நிபுணர்கள் கூறுவது என்ன?

நாம் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் நாம் உட்கொண்ட புரதத்தை உடலின் மீட்புக்கு பயன்படுத்துகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வொர்க்அவுட்டுக்கு முன்போ அல்லது பின்னரோ புரோட்டீன் எடுத்துக் கொண்டாலும், உங்களுக்கு எந்த வித்தியாசமும் இருக்காது. எனவே, எப்போதும் உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலை எடுக்க முயற்சி செய்யுங்கள்.
Pic Courtesy: Freepik