Side Effects Of Too Much Protein Powder: உடற்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் புரோட்டீன் ஷேக் எடுத்துக் கொள்வதைக் கேள்விப்பட்டிருப்போம். சாதகமான முடிவுகளைப் பெறுவதற்கு புரோட்டீன் பவுடர் சிறந்த துணைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வது வொர்க் அவுட்டின் போது இழக்கப்படும் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. எனினும், இதன் அதிகப்படியான நுகர்வு சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக் கொள்ளப்படும் புரோட்டீன் நுகர்வை உட்கொள்ளும் முன்னதாக அதன் நன்மை, தீமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் புரோட்டீன் ஷேக்கை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
அதிகளவு புரோட்டீன் உட்கொள்ளலின் விளைவுகள்
புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆனால், இதை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளைக் காணலாம்.
இன்சுலின் அளவு அதிகரிப்பு
புரோட்டீன் பவுடரை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். புரோட்டீன் பவுடரை உட்கொள்வது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இவ்வாறு இன்சுலின் அளவு அதிகமானால் நீரிழிவு பிரச்சனை ஏற்படலாம். இது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம்.
செரிமான பிரச்சனை
அதிகளவு புரோட்டீன் பவுடரை உட்கொள்வது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த புரோட்டீன் பவுடர் ஷேக் அருந்துவது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், குடலில் கெட்ட மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தலாம். இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கூடுதலாக, இதில் சேர்க்கப்படும் பால் சகிப்புத் தன்மையை ஊக்குவிக்கிறது. இது பால் அல்லது பால் சார்ந்த பிற பொருள்களை செரிமானத்தை கடினமாக்கலாம்.
முகப்பரு பிரச்சனை
புரோட்டீன் பவுடரை அதிகம் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம். இது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவை சருமத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது. புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ் உட்கொள்வதை இன்சுலின் அளவை அதிகரிப்பதுடன், முகப்பரு பிரச்சனையை அதிகரிக்கிறது. இதைத் தவிர, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Karela Jamun Juice: உடல் எடை முதல் சரும ஆரோக்கியம் வரை! கரேலா ஜாமுன் ஜூஸ் தரும் மகிமைகள்
அமில அளவு அதிகரிப்பது
அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடரை உட்கொள்வது இரத்தத்தில் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. பொதுவாக இரத்தத்தின் pH அளவு பொதுவாக 7.35 முதல் 7.45 வரை இருக்க வேண்டும். ஆனால் அதிகளவு புரோட்டீன் உட்கொள்ளல் pH அளவைக் குறைக்கலாம். இதன் காரணமாக இரத்தத்தில் கீட்டோன்களின் அளவு அதிகரிக்கிறது. இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
சிறுநீரக பாதிப்பு
புரோட்டீன் பவுடரை அதிகம் உட்கொள்வது சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனை அதிகளவு உட்கொள்வதால் உடலில் யூரியா உற்பத்தி அதிகரித்து, சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தினந்தோறும் புரோட்டீன் பவுடரை உட்கொள்வது சிறுநீரகத்தை வலுவடையச் செய்து சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டீன் ஷேக் அருந்துவது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
புரோட்டீன் பவுடர் உட்கொள்ளல் அளவு
உணவு முறையில் பருப்பு வகைகள், இறைச்சி அல்லது முட்டை போன்ற புரோட்டீன் மூலங்களைச் சேர்ப்பவராக இருப்பின் ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஸ்கூப் புரோட்டீன் பவுடரை மட்டும் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 டீஸ்பூன்களுக்கு மேல் புரோட்டீன் பவுடரை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Foods: சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லுனு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க
Image Source: Freepik