உஷார்! வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்துக்களை அதிகமா எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வரும்

  • SHARE
  • FOLLOW
உஷார்! வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்துக்களை அதிகமா எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வரும்

அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் ஆபத்தை தருமா?

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமச்சீர் உணவு மூலம், இந்த நுண்ணூட்டச்சத்துக்கள் பெறப்படுகிறது.

ஆனால், பலர் இந்த வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு அதிகம் எடுத்துக் கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். இதனால் பாதகமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். எனவே, ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கும் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலைத் தெரிந்து கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Reduce Body Heat: அடிக்கும் வெயிலில் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்? உடல் ஜில்லுனு இருக்க?

வைட்டமின் டி நச்சுத்தன்மை

வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசை செல்களின் வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவுகிறது. ஆனால், வைட்டமின் டி யை அதிகமாக உட்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். இந்த வைட்டமின் டி நச்சுத்தன்மையானது ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி என்று அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமின் டி நச்சுத்தன்மை உடலில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கும் போது ஏற்படுகிறது. பொதுவாக இது உணவு அல்லது சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் அதிகளவு வைட்டமின் டி காரணமாக நிகழ்கிறது. இதனால் இரத்தத்தில் கால்சியம் குவிந்து காணப்படுவது ஹைபர்கால்சீமியா என அழைக்கப்படுகிறது.

வைட்டமின் டி நச்சுத்தன்மையின் அறிகுறிகள்

வைட்டமின் டி சத்துக்களை அதிகளவு எடுத்துக் கொள்வதால், வாந்தி, குமட்டல், பலவீனம், எலும்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரத்த அளவு அதிகரிப்பு போன்றவை அடங்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது கோமா மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

வைட்டமின் டி எடுத்துக் கொள்வதற்கான அளவுகள் மாறுபடலாம். அதன் படி, பெரும்பாலான மக்களுக்கு 30-60 ng/mL-க்கு இடைப்பட்ட அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது மிகவும் உகந்ததாக இருக்கும். எனினும், 100 ng/mL ஐ விட அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.

அதிகளவு இரும்புச்சத்து உட்கொள்ளல் விளைவுகள்

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் இரும்பு மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். இது உடல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வது உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றாலும், இதன் அதிகப்படியான உட்கொள்ளல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

அதிகளவு இரும்புச்சத்து உட்கொள்ளல் காரணமாக வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். கடுமையான சந்தர்ப்பங்களில் அதிகளவு இரும்புச்சத்து கோமா, வலிப்பு, உடலுறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஹீமோக்ரோமாடோசிஸ் என்ற நிலையில் உள்ளவர்கள் ஆபத்தை சந்திக்கின்றனர். ஏனெனில், இவர்களின் உடல்கள் இரும்புச்சத்தை அதிகளவு உறிஞ்சி சேமித்து வைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Diarrhea: வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்? தடுப்பது எப்படி?

இரும்புச்சத்து உட்கொள்ளும் அளவு

தினசரி இரும்பு உட்கொள்ளலுக்கான அளவு வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து மாறுபடலாம். பெரியவர்களுக்கு அதிகபட்ச வரம்பாக ஒரு நாளைக்கு 45 மி.கி இரும்பு அளவை தவறாமல் பரிசோதிப்பது அவசியமாகும்.

உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்தின் பங்கு

வைட்டமின் டி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதன் படி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க வைட்டமின் டி உதவுகிறது. மேலும் இது கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதுடன், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. இதன் மூலம் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இது தசை செயல்பாடு, வலிமை, தசை ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே சமயம், இரும்புச்சத்துக்களும் உடலின் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அத்தியாவசிய கனிமமாக விளங்குகிறது. இதன் முதன்மையான செயல்பாடு உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதாகும். இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இரும்பு உள்ளது. இது நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜனுடன் பிணைக்கப்பட்டு உடல் முழுவதும் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்குக் கொண்டு செல்ல ஏதுவாக அமைகிறது.

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஊட்டச்சத்துகளை சரியான முறை மற்றும் அளவில் எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Jaggery: கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் சர்க்கரை அல்லது வெல்லம் சாப்பிடுவது நல்லதா?

Image Source: Freepik

Read Next

விழித்துக்கொள்.. குடிகளும் தமிழ் குடிகளும், அதிகரிக்கும் மது பழக்கம்! குடியை நிறுத்த இதை படிங்க!

Disclaimer

குறிச்சொற்கள்