அதிகப்படியான மக்னீசியம் உட்கொள்வதால் உங்க உடலில் என்னாகும் தெரியுமா?

Side effects of taking too much magnesium: மக்னீசியம் உட்கொள்வது ஆற்றல் உற்பத்திக்கும், எலும்புகளை வலுவாக வைத்திருப்பதற்கும் அவசியாகக் கருதப்படுகிறது. ஆனால் இதன் அதிகப்படியான நுகர்வு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் அதிகளவு மக்னீசியம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
அதிகப்படியான மக்னீசியம் உட்கொள்வதால் உங்க உடலில் என்னாகும் தெரியுமா?


What are the signs of too much magnesium: அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அவ்வாறு நரம்பு செயல்பாட்டைப் பராமரிக்கவும், தசைப்பிடிப்புகளைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மக்னீசியம் உதவுகிறது. இதை உறுதி செய்வதற்கு, தினசரி மெக்னீசியம் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மக்னீசியம் தாது உடலுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஏனெனில், இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நட்ஸ், விதைகள், இலை பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவதன் மூலம் மக்னீசியத்தைப் பெறலாம். இதற்கு கூடுதல் மருந்துகளும் உள்ளது. ஆனால், மருத்துவரை அணுகாமல் கடையிலிருந்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஊட்டச்சத்தாக இருப்பினும், சரியான அளவைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அதிகப்படியான அளவு மக்னீசியம் உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இதில் மெக்னீசியத்தின் சில பக்க விளைவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Magnesium Deficiency: உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம் மெக்னீசியம் குறைபாடாக கூட இருக்கலாம்!

மெக்னீசியத்தின் நன்மைகள்

மெக்னீசியத்தின் பக்க விளைவுகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, அது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பதை அறிந்து கொள்ளலாம்.

செரிமான ஆரோக்கியத்திற்கு - மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் குடலுக்குள் தண்ணீரை இழுத்து குடல் தசைகளை தளர்த்த உதவுகிறது. இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது.

மாதவிடாய் அசௌகரியத்தை நீக்க - இது நரம்பு செயல்பாட்டை அமைதிப்படுத்துவதன் மூலமும், ஹார்மோன் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் மாதவிடாயின் போது ஏற்படும் வீக்கம், பிடிப்புகள், மனநிலை மாற்றங்கள் போன்றவற்றைக் குறைக்கிறது.

தசைப்பிடிப்புகளைக் குறைக்க - மக்னீசியம் தாது தசைகள் சுருங்கிய பிறகு ஓய்வெடுக்கவும், பிடிப்புகள் மற்றும் விறைப்பைத் தடுக்கவும் உதவுகிறது. இது விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

எலும்புகளை வலுப்படுத்த - மக்னீசியம் எடுத்துக் கொள்வது எலும்பு உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிப்பதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு - இதய தசை உட்பட தசை சுருக்கங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நிலையான இதயத் துடிப்பை பராமரிக்க மக்னீசியம் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இதய நோய் மற்றும் பக்கவாதத்தைக் குறைக்க உதவுகிறது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு - நல்ல இரவு தூக்கத்திற்கு முக்கியமான மெலடோனினை ஒழுங்குபடுத்துகிறது. இது காமா-அமினோபியூட்ரிக் அமிலத்தை செயல்படுத்துகிறது. இது மூளையை அமைதிப்படுத்தும் ஒரு இரசாயனமாகும். மேலும் இது வேகமாக தூங்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sleeping Tips: படுத்த உடன் நிம்மதியாக தூங்கும் வரம் வேண்டுமா? ராணுவ தூக்கமுறை இதுதான்!

அதிகப்படியான மெக்னீசியத்தின் பக்க விளைவுகள்

இயற்கை உணவு மூலங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பொதுவாக மெக்னீசியம் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. உடல் மெக்னீசியம் அளவைக் கட்டுப்படுத்த இயற்கையான வழியைக் கொண்டுள்ளது. எனவே இது உணவிலிருந்து அதிகப்படியான மக்னீசியம் பொதுவாக சிறுநீரகங்கள் வழியாக சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. மக்னீசியத்தை குறிப்பாக சப்ளிமெண்ட்ஸ் அல்லது நரம்பு வழியாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளைக் காணலாம்.

குமட்டல்

மெக்னீசியத்தின் பக்க விளைவுகளில் ஒன்றாக குமட்டல் அமைகிறது. குறிப்பாக, வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது இந்த சப்ளிமெண்ட்கள் வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்கிறது. இது குமட்டல் உணர்வை அதிகரிக்கிறது.

குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம் மக்னீசியம் காரணமாகவோ அல்லது மிக அதிக அளவு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதாலோ ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், இவை இரத்த நாளங்களை அதிகமாக தளர்த்தலாம். இதன் காரணமாக மயக்கம், மங்கலான பார்வை மற்றும் மிகவும் சோர்வாக உணரலாம்.

தசை பலவீனம்

மக்னீசியம் உட்கொள்ளல் தசை மற்றும் நரம்பு கடத்தலை பாதிக்கிறது. மேலும் இதை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இது தசை பலவீனத்தை ஏற்படுத்தலாம். சோம்பல் காரணமாக கால்கள் மற்றும் கைகளை நகர்த்துவதில் சிரமத்தை உணரலாம்.

வயிற்றுப்போக்கு

மெக்னீசியத்தை அதிகமாக உட்கொள்வதன் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஆய்வு ஒன்றில், இதன் அதிகப்படியான நுகர்வு வயிற்றுப்போக்கிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

அரித்மியா அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆனது மெக்னீசியத்தின் பக்க விளைவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மிக அதிக மெக்னீசியம் அளவுகள் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கலாம். இது துடிப்புகளைத் தவிர்ப்பது, இதயத் துடிப்பு குறைவது அல்லது படபடப்பு உணர்வுக்கு வழிவகுக்கலாம்.

பசலைக்கீரை, பாதாம், வேர்க்கடலை மற்றும் சோயா பால் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனினும், இந்த சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Magnesium: மெக்னீசியம் நம் உடலுக்கு ஏன் முக்கியமானது? அதன் முக்கிய ஆதாரம் என்ன?

Image Source: Freepik

Read Next

Bathing Water: சருமம் பளபளக்க குளியல் நீரில் இந்த 5 பொருளை மட்டும் கலந்து பாருங்க!

Disclaimer