இன்ஸ்டாகிராம் பதிவால் நேர்ந்த விளைவு! அதிகளவு மஞ்சள் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்

What happens when you consume too much turmeric: மஞ்சளை பொதுவாக சிறிய அளவில் அல்லது சமையல் அளவில் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும். எனினும், அதிகளவு மஞ்சள் எடுத்துக் கொள்வது குறிப்பாக சப்ளிமெண்ட்ஸ் அல்லது அதிகப்படியான தினசரி உட்கொள்ளல் சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
  • SHARE
  • FOLLOW
இன்ஸ்டாகிராம் பதிவால் நேர்ந்த விளைவு! அதிகளவு மஞ்சள் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்


Turmeric dangers side effects: நம் அன்றாடசமையலில் சேர்க்கப்படும் சில மசாலா பொருள்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் பாரம்பரியமாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்ட மசாலா பொருள்களில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவை அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இந்த பண்புகள் நிறைந்த மஞ்சளை அன்றாட உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

அதே சமயம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பதிவுகளில் பலரும் மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பதிவிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒவ்வொருவரின் உடல்நிலையும் வெவ்வேறான அமைப்பு மற்றும் செயல்பாடுகளைக் கொண்டதாகும். இந்நிலையில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் மீது அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஆனால், சில நேரங்களில் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதும் ஆபத்தை விளைவிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சளின் ஆரோக்கியம் டபுள் மடங்காக கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க... இந்த தவறுகள மட்டும் செய்யாதீங்க!

இன்ஸ்டகிராம் பதிவால் நேர்ந்த விளைவு

அவ்வாறே அமெரிக்காவில் ஒரு பெண், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வந்த பதிவைப் பார்த்து மஞ்சள் மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் பல்வேறு உடல் அபாயங்களைச் சந்தித்துள்ளதாக NBC தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டதாவது, மார்ச் மாதத்தில், இன்ஸ்டாகிராமில் ஒரு மருத்துவரைப் பார்த்து, வீக்கம் மற்றும் மூட்டு வலி நிவாரணத்திற்கான நன்மைகள் குறித்துப் பேசிய கேட்டி மோகன், தினமும் மஞ்சள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

அதிகளவு மஞ்சள் எடுத்துக் கொண்டால் ஆபத்தா?

சில வாரங்களுக்குப் பிறகு, 57 வயதான அவருக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் அவர், “எனக்கு பொதுவாக உடல்நிலை சரியில்லை. ஒவ்வொரு நாளும் நிறைய தண்ணீர் குடித்தாலும், சிறுநீர் கருமையாக இருப்பதையும் கவனித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, அமெரிக்காவில் எவ்வளவு மஞ்சள் உட்கொள்வது பாதுகாப்பானது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. அதே சமயம், மஞ்சள் மாத்திரைகள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி டோஸ் ஒரு கிலோ உடல் எடைக்கு 0-3 மி.கி என குறிப்பிடப்படுகிறது.

மஞ்சள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாக அறியப்பட்டாலும், அதை அதிளவு உட்கொள்வது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். மஞ்சளில் குர்குமின் என்ற கலவை பொதுவாக சிறிய அல்லது சமையல் அளவுகளில் பாதுகாப்பானதாகும். எனினும், குறிப்பாக சப்ளிமெண்ட்ஸ் அல்லது அதிகப்படியான தினசரி உட்கொள்ளல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இவை மருந்துகளில் தலையிடலாம் மற்றும் கல்லீரலுக்குக் கூட பாதுகாப்பை ஏற்படுத்தலாம். மஞ்சளின் அதிகப்படியான நுகர்வு பொதுவாக சப்ளிமெண்ட்ஸ் மூலம் நிகழ்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: டிரெண்டிங் ரீல்ஸ் பண்ணிட்டு மஞ்ச தண்ணிய கீழ ஊத்தாதீங்க.. அதுல எவ்வளோ நல்லது இருக்கு தெரியுமா.?

மஞ்சள் அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் அறிகுறிகள்

இரும்பு உறிஞ்சுதல் பிரச்சினை

அதிகளவு மஞ்சள் உட்கொள்வது இரும்பு உறிஞ்சுதலில் தலையிடக்கூடும். இது இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துவதுடன், இரத்த சோகைக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, மாதவிடாய் உள்ள பெண்கள் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.

வயிற்று வலி

அதிகப்படியான மஞ்சள் உட்கொள்ளல் இரைப்பைக் குழாயை எரிச்சலடையச் செய்கிறது. இது வீக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது அஜீரணத்திற்கு வழிவகுக்கலாம். குறிப்பாக வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தலாம்.

கல்லீரல் அழுத்தம்

அரிதாக இருப்பினும், நீண்ட காலத்திற்கு அதிக அளவு குர்குமின் எடுப்பது கல்லீரல் நொதிகளை அதிகரிக்கக்கூடும் அல்லது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். கல்லீரலால் வளர்சிதை மாற்றப்படும் மருந்துகளுடன் எடுத்துக் கொள்ளும்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிறுநீரக கற்கள் அபாயம்

மஞ்சளில் அதிகளவு ஆக்சலேட்டுகள் உள்ளது. இவை கால்சியத்துடன் பிணைந்து சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கிறது. குறிப்பாக, கற்கள் ஏற்படும் நபர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி

  • சமையலில் மஞ்சளைப் பயன்படுத்துவது பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாகும்.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயம் இருந்தால், மஞ்சள் உட்கொள்வதை அதிக ஆக்சலேட் உணவுகளுடன் இணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள், நீரிழிவு மருந்துகள் அல்லது பித்தப்பை/கல்லீரல் பிரச்சினைகள் இருப்பின், அவர்கள் சப்ளிமெண்ட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
  • உடல் வீக்கம், சோர்வு அல்லது பிற அசாதாரண அறிகுறிகளைக் கவனித்தால், இதன் உட்கொள்ளலைக் குறைக்க மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric side effects: அளவுக்கு அதிகமாக மஞ்சள் எடுத்துக்கிட்டா உங்களுக்கு இந்த பிரச்சனை வர்றது கன்ஃபார்ம்

Image Source: Freepik

Read Next

கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள்.!

Disclaimer