Expert

Turmeric during Pregnancy: கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தா? உண்மை இங்கே!

  • SHARE
  • FOLLOW
Turmeric during Pregnancy: கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தா? உண்மை இங்கே!


Is Too Much Turmeric Bad For Pregnant Woman: கர்ப்பம் என்பது பெண்ணாக பிறந்த அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமான காலம். இந்த காலகட்டத்தில் பெண்கள் என்ன சாப்பிடணும், என்ன சாப்பிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் வாழ்க்கை முறை தொடர்பான பழக்கவழக்கங்கள், தூக்கம்-விழித்தல் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால், இவை அனைத்தும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். அதிலும், குறிப்பாக டயட் விஷயத்தில் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் உணவில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், கர்ப்ப காலத்தில் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்று பல பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Obesity and Pregnancy: உடல் பருமன் நார்மல் டெலிவரிக்கு இடையூறாக இருக்குமா? டாக்டர் கூறுவது இங்கே!

மஞ்சளில் பல கூறுகள் உள்ளன. இதனால், கர்ப்பிணிப் பெண் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம். அப்படியானால், கர்ப்பிணிப் பெண் ஏன் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது? என்பது பற்றி புதுதில்லியில் உள்ள மதர்ஸ் லேப் ஐவிஎஃப் மையத்தின் மகளிர் மருத்துவ இயக்குநர் மற்றும் ஐவிஎஃப் நிபுணர் டாக்டர் ஷோபா குப்தாவிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே_

கர்ப்ப காலத்தில் மஞ்சளை ஏன் அதிகமாக உட்கொள்ளக்கூடாது?

மஞ்சள் ஒரு இயற்கையான பொருள். இதை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தவிர, இதில் பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இதன் நுகர்வு ஆரோக்கியத்தில் மிகவும் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சள் வீட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்வதைப் பொறுத்தவரை, இது தொடர்பாக மிகக் குறைவான சான்றுகள் உள்ளன.

இந்த பதிவும் உதவலாம் : Curd Vs ButterMilk: கர்ப்ப காலத்தில் எதை உட்கொள்ளலாம்? நிபுணர்கள் கருத்து!

ஆனால், பல நிபுணர்கள் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இது குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், கர்ப்பிணிகள் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.

இதை அதிக அளவில் உட்கொள்வது குழந்தையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது கருவுறுதலையும் பாதிக்கிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் சாப்பிடணும்? என்று கேட்டால், ஒரு பெண் தினமும் அரை தேக்கரண்டி மஞ்சளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மஞ்சள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஒரு பொதுவான பிரச்சனை. இதிலிருந்து விடுபட மஞ்சளை உட்கொள்ளலாம். இது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகிறது. இந்நிலையில், வாயில் இருந்து ரத்தம் கசிவது, ஈறுகள் வலுவிழப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படத் தொடங்கும். இதிலிருந்து விடுபட மஞ்சளை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Swimming During Pregnancy: கர்ப்ப காலத்தில் நீச்சலடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

இது ஈறுகளில் இரத்தப்போக்கு பிரச்சனையை நீக்குகிறது. மஞ்சளை குறைந்த அளவில் உட்கொள்வது குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும், உடலில் ஏற்படும் அழற்சியும் குறைகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Swimming During Pregnancy: கர்ப்ப காலத்தில் நீச்சலடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version