Side effects of rubbing your eyes: உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கண்கள் மிகவும் உணர்திறன் மிக்கதாகும். எனவே இதை சரியான முறையில் பாதுகாப்பாக கையாள்வது அவசியமாகும். இல்லையெனில், நாம் செய்யும் சிறிய தவறுகளும் கண் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். நாம் பெரும்பாலும் கண் சோர்வு, வறட்சி அதிலும் குறிப்பாக அரிப்பு போன்றவை ஏற்படும் போது கண்களைத் தொடுவதிலேயே கவனம் செலுத்துகிறோம்.
கண்களைத் தொடுவது மட்டுமல்லாமல், அரிப்பு காரணமாக நாம் கண்களைத் தேய்த்து விடுகிறோம். இவ்வாறு கண்களைத் தேய்ப்பது அந்த நேரத்திற்கு நன்மை பயக்கும். எனினும், இது கற்பனை செய்வதை விட அதிகளவு தீங்கு விளைவிக்கும் அபாயம் ஏற்படலாம். அதாவது கண்களில் எரிச்சல், தீவிர நோய்த்தொற்று அபாயம், கண்பார்வை சேதம் உள்ளிட்ட பெரிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தான் கண்களைத் தேய்க்கும் முன்னதாக ஒன்றுக்கு இருமுறை யோகிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: கண்கள் ஷார்ப்பா இருக்கணுமா? உங்க டயட்ல இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க!
கண்களை தேய்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
கண்களை அடிக்கடி தேய்க்கும் போது கண் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் காணலாம்.
ஒவ்வாமை அபாயம்
நம் கண்களை அடிக்கடி தேய்க்கும் போது, அதனைச் சுற்றியுள்ள மெல்லிய, மென்மையான திசுக்கள் எரிச்சலூட்டப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வாமை அல்லது வறட்சியின் அறிகுறிகள் மேலும் மோசமாகலாம். கண்களைத் தேய்க்கும் போது, ஹிஸ்டமைன்களின் வெளியீடு தூண்டப்படுகிறது. இந்த ஒவ்வாமைக்கு உடலின் இயற்கையான எதிர்வினையாக, கண்களில் மேலும் அரிப்பு மற்றும் கண் சிவத்தல் உண்டாகலாம்.
இது தேய்த்தல் மற்றும் எரிச்சலின் சுழற்சியை உருவாக்குகிறது. அதிலும் பருவகால ஒவ்வாமை அல்லது கண் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, கண்களைத் தேய்ப்பதற்குப் பதிலாக, குளிர்ந்த, ஈரமான துணியைப் பயன்படுத்தி, கண்களின் அரிப்பை மெதுவாக ஆற்றலாம். இது தவிர, மருத்துவர்களின் பரிந்துரையின் கீழ் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வது கண்களை எரிச்சலடையச் செய்யாமல் விரைவில் நிவாரணம் அளிக்கலாம்.
கிருமிகள், பாக்டீரியாக்கள் அபாயம்
நாம் நமது கைகளை பல்வேறு மேற்பரப்புகளுடன் தொடர்படையச் செய்கிறோம். இதனால், கைகளில் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தேங்கியிருக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். இந்த சமயத்தில், நாம் கைகளை நம் கண்களில் வைத்து தேய்க்கும் போது, குறிப்பாக கைகளைக் கழுவாமல் தேய்ப்பது இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் போன்றவை கண்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, கண்களில் சிவத்தல், எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. எனவே, கண்களைத் தொட வேண்டிய நிலை ஏற்பட்டால், கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு சுத்தம் செய்து பிறகு தொடலாம். இவ்வாறு செய்வது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Children Vision Problem: குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் கண்கள் பிரச்சனை! பெற்றோர்களே உஷார்!
கருவளையம், சுருக்கங்களுக்கான அபாயம்
கண்களை அடிக்கடி தேய்ப்பது கண்களுக்கு மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், கண்கள் உணர்திறன் மிக்கதாகவும், கண்களைச் சுற்றியுள்ள தோல் மெலிதாகவும், உடையக் கூடியதாகவும் காணப்படலாம். மேலும், தொடர்ந்து தேய்ப்பதால் கண்களின் இரத்த நாளங்கள் சேதமடைந்து கருவளையங்கள் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. காலப்போக்கில், இது கண்களைச் சுற்றி நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை விரைவுபடுத்துகிறது. இதனால், சோர்வாகவோ அல்லது வயதானவராக தோற்றமளிக்கலாம்.
கெரடோகோனஸ் வளரக்கூடிய ஆபத்து
கண் மருத்துவத்தின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், கண்களை அதிகப்படியாக தேய்ப்பது காலப்போக்கில் கார்னியாவின் கட்டமைப்பைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கெரடோகோனஸ் ஏற்படலாம். கண்களை அழுத்தும் போது, கார்னியா மெலிந்து பலவீனமடைந்து, கூம்பு போன்ற வடிவமாக விரிவடைகிறது. இதன் கடுமையான நிலையாக, பார்வை குறைபாடு, ஒளி உணர்திறன் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் கெரடோகோனஸ் ஆனது ஒரு சீரழிவுக் கோளாறு ஆகும். இது கண் காய்த்தலால் ஏற்படக்கூடியதாகும். இந்த அசௌகரியத்தால் கண்கள் அடிக்கடி சொறியும் நிலை ஏற்பட்டால் கண் நிபுணரை அணுகுவது நல்லது.
இவ்வாறு கண்களைத் தேய்ப்பதால் இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Home Remedies For Dry Eye: கண்களில் வறட்சி, எரிச்சல் தாங்க முடியலையா?... உடனடி தீர்வுக்கு ஈசியான வீட்டு வைத்தியங்கள்!
Image Source: Freepik