பூண்டை கால்களில் தேய்ப்பதால் என்னாகும் தெரியுமா? அப்ளை பண்றதுக்கு முன்னாடி இத நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Does rubbing garlic on your feet: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தொற்று நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் பூண்டை பாதங்களில் தேய்ப்பது சில நன்மைகளைத் தருகிறது. எனினும், பூண்டின் ஆரோக்கிய பண்புகள் பாதங்கள் வழியாக உறிஞ்சப்படுவது நிரூபிக்கப்படவில்லை. இதில் பூண்டை கால்களில் தேய்ப்பதால் என்னாகும் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பூண்டை கால்களில் தேய்ப்பதால் என்னாகும் தெரியுமா? அப்ளை பண்றதுக்கு முன்னாடி இத நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்


What happens if you rub garlic on your feet: அன்றாட வாழ்வில் நாம் செய்யக்கூடிய சில பழக்க வழக்கங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்குப் பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, நாம் இரவு நேரங்களில் செய்யக்கூடிய சில அன்றாட பழக்கங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கக்கூடும். அவ்வாறே, கால்களில் இரவு தூங்கும் போது எண்ணெய் வைத்து படுப்பதை சில வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஆனால், இன்னும் சிலர் கால்களில் இரவு தூங்கும் முன்பாக பூண்டு தேய்த்து விட்டு படுக்கலாம் எனக் கூறுகின்றனர். உண்மையில் இது நன்மை பயக்குமா? பூண்டை கால்களில் தேய்ப்பதால் என்னாகும்? என்பது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

பூண்டை கால்களில் தேய்க்கலாமா?

பூண்டு என்பது ஆயுர்வேத பண்புகள் கொண்ட ஒரு மசாலாப் பொருள் ஆகும். இது பல்வேறு வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. பிரியங்கா சோப்ரா தனது கேரோசல் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒருவர் கால்களில் பூண்டைத் தேய்ப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இது சிலருக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். உண்மையில், இந்த நடைமுறை ய மருந்துகளைப் பிரதிபலிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உறங்கும் முன் உள்ளங்கால்களில் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் என்னாகும் தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு

ஆம். பூண்டு உட்கொள்வது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் போன்ற சேர்மங்கள் ஆனது வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதை பாதங்களில் தேய்க்கும்போது, அல்லிசின் தோலில் உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் நுழைந்து, உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுவதாகக் கூறப்படுகிறது.

பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக

பூண்டு பயன்படுத்துவது பாதப்படைக்கான பிரபலமான வீட்டு வைத்தியம் ஆகும். இதற்கு பூண்டில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் உள்ள சிறிய பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. எனினும், உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது அவசியமாகும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துமா?

பூண்டில் உள்ள சல்பர் என்ற கலவையானது உடலில் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவாக மாறுகிறது. இந்த வாயு ஆனது இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. இந்நிலையில், பூண்டை கால்களில் தேய்ப்பது இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதற்கான ஒரு எளிய வழியாகக் கருதப்படுகிறது.

தசை மற்றும் மூட்டு வலிக்கு

பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு விளைவுகள் ஆனது நீண்ட நேர வேலை அல்லது தீவிரமான உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய தசை மற்றும் மூட்டு வலிக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வலியுள்ள பாதங்களில் பூண்டைத் தேய்ப்பது தசை விறைப்பு அல்லது மூட்டு அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உள்ளங்கால் எரியுதா? - அப்போ உங்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

குறிப்பு

பூண்டு நிரூபிக்கப்பட்ட மருத்துவ குணங்களை வழங்கினாலும், இதை கால்களில் தேய்ப்பது அந்த நன்மைகளை அடைய ஒரு பயனுள்ள அல்லது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வழி அல்ல. சிறந்த நிலையில், இது சிறிய பூஞ்சை எதிர்ப்பு விளைவுகளை வழங்கலாம். ஆனால், மோசமான நிலையில், இது ரசாயன தீக்காயங்கள் மற்றும் தோல் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள முடிவுகளுக்கு பூண்டு சாப்பிடுவதையோ அல்லது வடிவமைக்கப்பட்ட பூண்டு சாற்றைப் பயன்படுத்துவதையோ கையாளலாம். இது உதவியாக இருக்கிறதா அல்லது தீங்கு விளைவிப்பதா என்பது குறித்து ஆராய தோல் நிபுணர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மருத்துவ எச்சரிக்கைகள்

காலில் பூண்டு தடவுவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். மேலும் இது நோயைக் குணப்படுத்தாது. பூண்டு ஒரு இயற்கையான இரசாயன எரிச்சலூட்டும் தன்மை கொண்டதால், இதை பச்சையாக சருமத்தில் தடவுவது குறிப்பாக சாக்ஸ் போன்ற அடைப்புகளின் கீழ் கடுமையான தீக்காயங்களுக்கு வழிவகுக்கலாம். மேலும் சில சமயங்களில் கொப்புளங்கள், சிவத்தல் மற்றும் வீக்கம், வலிமிகுந்த புண்கள், குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய முறைகளைக் கையாள்வதற்கு முன்பாக எப்போதும் மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தூங்குவதற்கு முன் காலில் எண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

தொடை உராய்வால் அவதியா? வலி டக்குனு சரியாக இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version