Garlic roasted with ghee: பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிட்ருக்கீங்களா? இது தெரிஞ்சா நீங்களும் சாப்பிடுவீங்க

Garlic fried in ghee benefits: நெய் மற்றும் பூண்டு இரண்டுமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் நெய்யில் வறுத்த பூண்டு உட்கொள்வதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Garlic roasted with ghee: பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிட்ருக்கீங்களா? இது தெரிஞ்சா நீங்களும் சாப்பிடுவீங்க

Garlic with ghee health benefits in tamil: அன்றாட உணவில் நெய் சேர்ப்பது உணவில் சுவையை அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. நெய்யுடன் பூண்டு சேர்த்து உட்கொள்வது நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் பூண்டை நெய்யுடன் வறுத்து சேர்த்து சாப்பிடுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இது உணவுகளை மிகவும் சுவையாக மாற்றுவது மட்டுமல்லாமல், ஒரு பயனுள்ள தேர்வாகவும் அமைகிறது. இந்த தனித்துவமான சுவையுடன் கூடிய நெய்யில் வறுத்த பூண்டு கலவையை நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

நெய்யில் வறுத்த பூண்டு

பூண்டு நெய் ஆனது பூண்டுடன் நெய் கலந்து தயாரிக்கப்படும் கலவையாகும். இந்த கலவையைத் தயார் செய்வதற்கு பூண்டின் கொழுப்பில் கரையக்கூடிய சேர்மங்கள் ஊட்டச்சத்து நிறைந்த நெய்யுடன் தடையின்றி கலக்கிறது. இது சுவையுடன், ஊட்டச்சத்துக்களையும் மேம்படுத்தக்கூடிய ஒரு சுவையான தேர்வாக அமைகிறது. இந்த நெய்யில் வறுத்த பூண்டு கலவையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. பூண்டு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

அதே போல, நெய் செரிமானத்தை பலப்படுத்தக்கூடிய பண்புகள் நிறைந்ததாகும். இவை இரண்டுமே ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. எனவே இந்தக் கலவையை உட்கொள்வது கொழுப்பின் அளவை ஒழுங்குபடுத்தவும், ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நெய்யில் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Garlic Milk Benefits: பலன்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டு பால்.! அருமையை தெரிஞ்சிக்கோங்க..

நெய்யில் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை மேலாண்மைக்கு

பூண்டு நெய்யை மிதமாக உட்கொள்வது உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் வயிறு நிரம்பிய திருப்தி உணர்வைத் தருகிறது. மேலும் பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும், பூண்டு, லெப்டின் என்ற ஹார்மோனை ஒழுங்குபடுத்துவதன் மூலம் பசியின்மையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பூண்டில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட அல்லிசின் என்ற சல்பர் கலவை நிறைந்துள்ளது. ஆய்வு ஒன்றில் பூண்டு லிம்போசைட்டுகள், மேக்ரோபேஜ்கள் போன்ற சில செல் வகைகளைத் தூண்டுகிறது. இதன் மூலம் உடல் பருமன், இருதயக் கோளாறுகள், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, புற்றுநோய் மற்றும் இரைப்பைப் புண்களைக் குணப்படுத்தவும், தடுக்கவும் உதவுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும் நெய்யுடன் இணைப்பதன் மூலம் பூண்டு நெய் ஒரு இயற்கையான நோயெதிர்ப்பு ஊக்கியாக மாறுகிறது.

செரிமானத்தை மேம்படுத்த

நெய் மற்றும் பூண்டு இரண்டுமே செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடியதாகும். நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது குடல் செல்களை வளர்க்கிறது. ஆய்வு ஒன்றில், பூண்டின் மிதமான நுகர்வு சில இரைப்பை-குடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது புண்கள் உருவாவதைத் தடுக்கிறது. அதே சமயம், பூண்டில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்கும் ப்ரீபயாடிக் பண்புகள் உள்ளது. இவை ஒன்றாக இணைப்பது செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Butter Garlic Egg: வெறும் 2 முட்டை போதும்.. அட்டகாசமான பட்டர் கார்லிக் முட்டை செய்யலாம்!

நச்சு நீக்கத்தை மேம்படுத்துவதற்கு

உடலை நச்சு நீக்கம் செய்வதற்கு நெய்யில் வறுத்த பூண்டை உட்கொள்ளலாம். ஏனெனில் பூண்டில் கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு உதவும் சல்பர் சேர்மங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நச்சுக்களை உடைத்து வெளியேற்ற உதவுகிறது. இதை நெய்யுடன் உட்கொள்வதால் இந்த சேர்மங்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதிசெய்து, உடலின் இயற்கையான நச்சு நீக்க பாதைகளை ஆதரிக்கிறது. மேலும் நெய்யில் நிறைந்த பியூட்ரேட், ஆரோக்கியமான குடல் புறணியை பராமரிக்கவும், கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்றுவதற்கும் மிகவும் முக்கியமானதாகும்.

வீக்கத்தைக் குறைக்க

நெய்யில் வறுத்த பூண்டு அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது உணவில் ஆரோக்கியமான கூடுதலாக அமைகிறது. நெய்யில் உள்ள ப்யூட்ரேட் மற்றும் பூண்டில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் கலவையானது, வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உட்பட பல நாள்பட்ட நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது. இதன் மூலம் வீக்கத்தை எதிர்த்துப் போராடலாம். இது தவிர, பூண்டு மற்றும் நெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Garlic and Honey: ஒரு வாரம் வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் சாப்பிடுவதன் நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Aloe vera chia seeds benefits: கற்றாழையுடன் சியா விதை சேர்த்த தண்ணீர் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?

Disclaimer