Why you should start your day with okra water & lemon: அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள், பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். அதன் படி, வெண்டைக்காய் தண்ணீர் மற்றும் எலுமிச்சை நீர் நிறைந்த எளிய காலை பானம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாகும். இது உடலுக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தைத் தருகிறது. ஓக்ரா தண்ணீரில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இதை எலுமிச்சையின் புத்துணர்ச்சியூட்டும் சுவையுடன் இணைப்பது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.
ஊட்டச்சத்துக்கள்
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட், கரோட்டீன், பெக்டின், புரோட்டீன் போன்ற பல்வேறு வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதே போல, சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை அதன் சுவைக்காகவும் அற்புதமான மருத்துவ குணங்களுக்காகவும் தனித்து விளங்குகிறது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் தாத்துக்கள் போன்றவை அதிகளவு உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water for Weight Loss: எப்பேற்பட்ட தொப்பையையும் குறைக்க உதவும் வெண்டைக்காய் நீர். இப்படி குடிச்சி பாருங்க
வெண்டைக்காய் நீருடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிப்பதன் நன்மைகள்
எடையைக் கட்டுப்படுத்த
கூடுதல் கிலோ எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பானம் அருந்துவது எளிய மற்றும் இயற்கையான வழியாக அமைகிறது. காலை எழுந்ததும் இந்த பானத்துடன் நாளைத் தொடங்கலாம். வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் இது நீண்ட நேரம் நம்மை நிறைவாக வைத்திருக்க உதவுவதுடன், தேவையற்ற சிற்றுண்டிகளைத் தடுக்கிறது. வெண்டைக்காயில் உள்ள பெக்டின் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கிடையில் எலுமிச்சையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் கொழுப்பை எரிப்பதை துரிதப்படுத்துகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
எலுமிச்சையுடன் கூடிய வெண்டைக்காய் நீர் செரிமானத்திற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம். வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது இயற்கையான மலமிளக்கியாகச் செயல்பட்டு , குடல் இயக்கத்தை மென்மையாகவும் எளிதாகவும் மாற்றுகிறது. வெண்டைக்காயின் சளி அமைப்பு செரிமானப் பாதையை மேம்படுத்தி வீக்கத்தைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான நொதிகளைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்தை திறம்பட செயல்பட வைக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்க
உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் வெண்டைக்காய் எலுமிச்சை பானம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, நமது சிறுநீரகங்கள் மாசுக்களை அகற்ற கடுமையாக உழைக்கிறது. இதற்கு இந்த பானம் சிறந்த தேர்வாக அமைகிறது. வெண்டைக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை சிறுநீரக காயத்தைத் தடுக்கவும், எலுமிச்சை ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் மாசுக்களை நீக்கவும், சிறுநீரகக் கற்களைத் தடுக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் இந்த பானம் அருந்துவது உடலை நீரேற்றமாகவும், நச்சுத்தன்மையற்றதாகவும் வைத்திருக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்புச் சக்தி வரை. வெண்டைகாய் நீர் தரும் அற்புத நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க
பருவகால மாற்றத்தினால் எளிதில் சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்நிலையில் உடலில் குறைந்த நோயெதிர்ப்புச் சக்தி இருப்பதே காரணமாகும். இந்த பானம் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. எலுமிச்சை மற்றும் வெண்டைக்காயில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வெண்டைக்காயின் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதே போல, எலுமிச்சையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைத் தடுக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
சருமத்தின் பளபளப்பை மேம்படுத்த
சருமத்தைப் பளபளப்பாக வைத்திருப்பதில் ஓக்ரா எலுமிச்சை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை முன்கூட்டிய வயதானதை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் எலுமிச்சையின் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கிறது. இந்த கலவையை தினமும் குடிப்பதால் சருமத்தை நீரேற்றமாகவும், தெளிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Okra honey water benefits: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் நீருடன் தேன் சேர்த்து குடிப்பதில் இத்தனை நன்மைகளா?
Image Source: Freepik