Health benefits of drinking warm water with garlic, ginger, and lemon: அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்களைச் சேர்க்க வேண்டும். குறிப்பாக, வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பானங்கள் அந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைக்கவும், நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையாகவே நம் வீடுகளில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தலாம்.
அதன் படி, நம் சமையலறையில் கிடைக்கக்கூடிய சில பொருள்களான பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்ற பொருள்களைப் பயன்படுத்தலாம். இவை மூன்றுமே சுவைகளுக்காக மட்டுமல்லாமல், பல்வேறு சுகாதார நன்மைகளை அளிக்கும் சிறந்த பொருளாகும். பல நூற்றாண்டுகளாகவே, இந்த மூன்று பொருள்களும் பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்கக்கூடியதாகும். இதில் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பது என்னென்ன நன்மைகளைத் தரும் என்பது குறித்து காணலாம்.
இந்த புத்துணர்ச்சியூட்டும் கலவையை அன்றாட வழக்கத்தின் முக்கிய பகுதியாக மாறுகிறது. இது வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததால், உடலுக்குப் பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ginger Lemon Tea: மழைக்காலத்தில் இஞ்சி எலுமிச்சை டீ குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்!
தினமும் பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, தினமும் பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்த தண்ணீரைச் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்.
செரிமானத்தை மேம்படுத்த
இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை நீரை குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இஞ்சி சேர்ப்பது செரிமான அசௌகரியம் மற்றும் குமட்டலைப் போக்க உதவுகிறது. மேலும் பூண்டு உட்கொள்வது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கிறது. அதே சமயம், எலுமிச்சையின் அமிலத்தன்மை செரிமான சாறுகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
எடை இழப்பை ஆதரிக்க
பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்றவற்றை ஒன்றாகச் சேர்ப்பது உடல் எடையிழப்பு முயற்சிகளுக்கு நன்மை பயக்கும். இஞ்சியை சேர்ப்பது பசியைக் குறைக்கவும், முழுமையின் உணர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதே சமயம் எலுமிச்சையின் அமிலத்தன்மை கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பூண்டு எடுத்துக் கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பானத்தை எடுத்துக் கொள்வது எடை நிர்வாகத்தில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
நீரேற்றத்தை அதிகரிக்க
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நீரேற்றத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் தண்ணீர் குடிப்பது நாள் முழுவதும் அதிக திரவங்களை உட்கொள்ள வழிவகுக்கிறது. இதன் புத்துணர்ச்சியூட்டும் சுவை உடலுக்கு நீரேற்றத்தை மிகவும் சுவாரஸ்யமாக வழங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை நீர் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைத் தருகிறது. பூண்டு அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இவை தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு விளைவுகள், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி போன்றவை உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த இணைந்து செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Drinks for healthy bones: இரும்பு போல ஸ்ட்ராங்கான எலும்பு வேணுமா? தினமும் காலையில் இந்த ட்ரிங்ஸ் குடிங்க
ஆரோக்கியமான சருமத்திற்கு
பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை நீரில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை வயதானதை துரிதப்படுத்துவதற்கும், தோல் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. இதில் எலுமிச்சை வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு குறிப்பாக நன்மை பயக்கும். இது சரும நெகிழ்ச்சித்தன்மை மற்றும் தோற்றத்தை பராமரிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த
பூண்டு உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. இது நீரிழிவு அல்லது முன் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நபர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், இஞ்சி சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை நிலையானதாக மாற்ற உதவுகிறது.
பூண்டு, இஞ்சி, எலுமிச்சை தண்ணீர் தயார் செய்வது எப்படி?
இந்த புத்துணர்ச்சியூட்டும் டீடாக்ஸ் பானத்தைத் தயார் செய்வது மிகவும் எளிதாகும்.
தேவையானவை
- புதிய பூண்டு - 2-3 பல் (நசுக்கியது)
- புதிய இஞ்சி - 1 அங்குலம் (தோல் நீக்கி, நறுக்கியது)
- எலுமிச்சை - 1 (சாறு பிழிந்தது)
- தண்ணீர் - 4 கப்
செய்முறை
- பாத்திரம் ஒன்றில், தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதிக்கும் நீரில் நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியைச் சேர்க்க வேண்டும்.
- தீயைக் குறைத்து சுமார் 10-15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
- பிறகு இதை வெப்பத்திலிருந்து நீக்கி சிறிது குளிர விடலாம்.
- இதில் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றைச் சேர்க்க வேண்டும்
- கலவையை வடிகட்டி சூடாகவோ அல்லது குளிர வைத்தோ எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒட்டுமொத்த கொழுப்பையும் வெளியேற்றி ஒல்லியான உடம்பு வேணுமா? தினமும் காலையில் இந்த டிடாக்ஸ் ட்ரிங்ஸ் குடிங்க
Image Source: Freepik