Is Okra Water Good For Health: ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இடம்பெறும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய் ஆகும். வெண்டைக்காய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. வெண்டைக்காயை நாம் பொரியல் வகைகளில் எடுத்துக் கொள்வதைக் கவனித்திருப்போம். மற்றொரு வகையாக வெண்டைக்காய் தண்ணீராக உட்கொள்ளலாம்.
வெண்டைக்காய் தண்ணீர் ஊட்டச்சத்துக்கள்
ஓக்ரா வாட்டர் அல்லது வெண்டைக்காய் நீர் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானமாகும். வெண்டைக்காயை ஊறவைத்துத் தயார் செய்யப்படும் வெண்டைக்காய் நீரில் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வழிகளில் நன்மை தருகிறது. ஓக்ரா வாட்டரில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.
வெண்டைக்காயில் புரதங்கள், கலோரிகள், கொழுப்புகள், கால்சியம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி, நியசின், பாந்தோத்தேனிக் அமிலம், ஃபோலேட், ரிபோஃப்ளவின், வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
வெண்டைக்காய் நீர் குடிப்பதன் நன்மைகள்
ஓக்ரா நீர் அல்லது வெண்டைக்காய் நீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
ஓக்ரா நீரில் ஃபிளவனாய்டுகள், வைட்டமின் சி மற்றும் பினாலிக் கலவைகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஓக்ரா நீரின் ஆக்ஸிஜனேற்றிகள், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதுடன், வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கு
ஓக்ரா நீரில் ஃபோலேட் நிறைந்துள்ளது. இவை மன ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். பொதுவாக மூளை செயல்பாட்டிற்கு உதவும் காய்கறிகளில் வெண்டைக்காயும் ஒன்று. இதன் நீர் மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
வெண்டைக்காய் நீரில் பாலிஃபினால்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஓக்ரா நீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Juice For Stress: மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க இந்த ஜூஸ்யை குடியுங்க!
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
ஓக்ரா நீரில் கேம்ப்ஃபெரால் மற்றும் குவெர்செடின் போன்ற பல்வேறு முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நடுநிலையாக்க உதவுகிறது.
அதிக நார்ச்சத்துக்கள்
வெண்டைக்காயில் குறிப்பிடத்தக்க அளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இதன் கரையாத நார்ச்சத்துக்கள், மலம் கழிப்பதை எளிதாக்குவதுடன், வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. மேலும் இது இது செரிமானத்திற்கு உதவுகிறது.
எடை இழப்பை ஊக்குவிக்க
ஓக்ரா தண்ணீரில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன், உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ஓக்ரா நீரை அருந்துவது செரிமானத்தை ஆதரிப்பதுடன், உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது. இதற்குக் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஓக்ரா நீரை அருந்தலாம்.
வெண்டைக்காய் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இவை நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.! ஏன்னு தெரியுமா.?
Image Source: Freepik