Benefits of okra water for hair and skin: ஓக்ரா என்ற வெண்டைக்காய் சுவையான மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்றதாகும். இது ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பான காய்கறி ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், பலருக்கும் ஓக்ராவின் அழகு நன்மைகள் பற்றி தெரியாது. வெண்டைக்காய் அல்லது ஓக்ராவில் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது தவிர, ஓக்ராவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது. மேலும் ஓக்ரா நீர் உடலில் முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இந்த ஓக்ரா நீரானது ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Beauty Benefits of Curd: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?
சரும ஆரோக்கியத்தில் ஓக்ரா தண்ணீரின் நன்மைகள்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
ஓக்ரா நீர் அருந்துவது தோலின் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது சருமத்தின் கறைகளை குறைக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் பொலிவான நிறத்தை அளிக்கிறது.
வயது எதிர்ப்புப் பண்புகள்
ஓக்ராவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த ஓக்ராவை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் இளமை மற்றும் மிருதுவான சருமத்தை பராமரிக்கலாம். இவ்வாறு முதுமை அறிகுறிகளை எதிர்த்து இளமை சருமத்தைப் பெற ஓக்ரா நீர் அருந்தலாம்.
கொலாஜன் உற்பத்திக்கு
ஓக்ராவின் நிறைந்துள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவை சருமத்தின் உறுதி மற்றும் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரித்து சருமத்தில் ஏற்படும் தொய்வைக் குறைக்க உதவுகிறது.
நீரேற்றமிக்க பானம்
இதன் அதிகநீர் உள்ளடக்கம் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சரும வறட்சியைத் தடுக்கவும் ஓக்ரா நீர் உதவுகிறது. எனவே தான் இது ஒரு நீரேற்றும் காய்கறியாக அமைகிறது. மேலும், இது ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இதன் மூலம் சருமத்தின் மேலடுக்கில் உள்ள நச்சுக்களை நீக்கி ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முடி ஆரோக்கியத்தில் ஓக்ரா தண்ணீரின் நன்மைகள்
பளபளப்பான முடிக்கு
ஓக்ரா தண்ணீரின் சளி போன்ற வடிவம் தலைமுடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இது தலைமுடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்ற உதவுகிறது. எனவே பளபளப்பான முடிக்கு ஓக்ரா தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil On Lips: உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
முடி வளர்ச்சிக்கு
ஓக்ரா வாட்டர் ஆனது சருமத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு ஓக்ராவில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவையே காரணமாகும். இவை முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இயற்கை முடி சிகிச்சையில் ஓக்ரா
இயற்கையான முடி சிகிச்சைக்கு ஓக்ராவைப் பயன்படுத்தலாம். இதற்கு ஓக்ராவை மெலிதாக மாறும் வரை வேகவைக்கலாம். அதன் பிறகு குளிரவைத்து, அந்தக் கலவையை தலைமுடியில் தடவலாம். இந்த ஹேர் மாஸ்க் பயன்பாடு முடி அமைப்பை மேம்படுத்துகிறது.
பொடுகு நீங்க
உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தணிக்க ஓக்ரா சிறந்த தேர்வாக அமைகிறது. இது உச்சந்தலையை மென்மையாக்கவும், முடி வளர்ச்சிக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
நகங்களை வலுப்படுத்த
ஓக்ராவில் நிறைந்திருக்கும் பயோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான நகங்களுக்கு பங்களிக்கிறது. இந்த பயோட்டின் ஆனது நகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நகங்கள் உடையக்கூடியத் தன்மையைத் தடுக்கவும் உதவுகிறது.
இவ்வாறு முடி, சருமம், நகங்கள் என அழகு பராமரிப்பில் ஓக்ரா தண்ணீர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Milk Bath Benefits: அழகை மெருகூட்டும் பால் குளியல்.! இப்படி தான் எடுக்கனும்..
Image Source: Freepik