$
Ways To Make Eyebrows Grow Faster: தடிமனான புருவங்கள் இருக்க வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது. தடிமனான, கட்டுக்கடங்காத புருவங்கள் ஒரு தைரியமான அழகுப் போக்காக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் சிலர் கண் புருவங்களை வளர்க்க சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனினும் கண்களில் புருவங்கள் வளர வைக்க சில இயற்கையான வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது.
புருவங்களை இயற்கையாக வளர்ப்பதற்கு சிறிது நேரமும் பொறுமையும் தேவைப்படலாம். ஆனால், சரியான குறிப்புகள் மற்றும் பொருட்களின் உதவியுடன் தேவையான முடிவைப் பெறலாம். சில ஊட்டமளிக்கும் எண்ணெய்கள், ஸ்மார்ட் க்ரூமிங் நுட்பங்கள் போன்றவற்றின் உதவியுடன் புருவங்களை வேகமாக மற்றும் அடர்த்தியாக வளர வைக்க முடியும். இதில் புருவங்களை அடர்த்தியாக மற்றும் வேகமாக வளர வைக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Thick Eyebrows Tips: உங்களுக்கு கருகருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!
கண் புருவங்களை வளர வைப்பது எப்படி?
இயற்கையான முறையில் கண் புருவங்களை எளிதாக அடர்த்தியாக மற்றும் தடிமனாக வளர வைக்கலாம்.
ஆமணக்கு எண்ணெய்
இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடி புருவத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இது தடிமனான எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது புருவத்தின் மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. இந்த எண்ணெயை உறங்கும் முன்பாக சுத்தமான தூரிகை அல்லது பருத்தி துணியைப் பயன்படுத்தி புருவங்களில் சிறிது தடவ வேண்டும். இவ்வாறு ஓரிரவு முழுவதும் வைப்பதன் மூலம் கண் புருவங்கள் அடர்த்தியாகிறது. இதை தினமும் செய்து வருவதன் மூலம் கண் புருவங்கள் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதை உணரலாம்.

அதிகம் பறிப்பதைத் தவிர்ப்பது
இதைப் பின்பற்றுவது சிறிது கடினமான ஒன்றாக அமையலாம். எனினும், அதிகளவு புருவமுடி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே சிறிதளவு புருவமுடி இருக்கும் அதை நேராக்க த்ரெட்டிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சாமணத்தை அடைவதற்கு முன்பாக, புருவங்களை அவற்றின் இயற்கையான வடிவத்தில் மீண்டும் வளர நேரம் கொடுக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
ஊட்டச்சத்துமிக்க தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மிகுந்த பயனளிக்கிறது. மேலும், முடியின் தண்டுகளை வலுப்படுத்த தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெயை புருவங்களில் ஒரு சிறிய அளவு மசாஜ் செய்து, தினமும் 20-30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இது முடி மற்றும் தோலுக்கு அடியில் ஊட்டமளிக்கும் வகையில் அமைகிறது. இவ்வாறு முடி மற்றும் தோலுக்கு அடியில் ஊட்டமளித்து, காலப்போக்கில் அடர்த்தியான புருவங்களை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Eyebrow Thickening Tips: அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க
முட்டையின் மஞ்சள் கரு
முடி கெரட்டினால் ஆனது ஆகும். மேலும் முட்டையில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மயிர்க்கால்களை வளர்க்க உதவுகிறது. இதற்கு முட்டையின் மஞ்சள் கருவை ஒரு வாரத்திற்கு ஒரு முறை புருவங்களில் தடவ வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்சைம்களைக் கொண்டுள்ளது. எனவே புருவங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க புதிய கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவ வேண்டும். இது முடி வளர்ச்சி விரைவாக வளர ஊக்குவிக்கிறது.

இவ்வாறு வீட்டிலேயே எளிமையான முறையில் கண் புருவங்களை அடர்த்தியாகவும், வேகமாகவும் வளர வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eyebrow Growth Tips : ஒரே வாரத்தில் புருவங்கள் அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்க
Image Source: Freepik