Eyebrow Thickening Tips: அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Eyebrow Thickening Tips: அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

அதே போல, கண்களுக்கு மேல் உள்ள எலும்புக் கோடுகளைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறது. மெலிந்த புருவம் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, புருவங்களை தேய்ப்பது, ஏதேனும் ஆட்டோ இம்யூன் நோய் போன்றவை ஆகும். இதன் காரணமாக, புருவப்பட்டைகள் அதிகமாக விழுந்து பலவீனம் அடைவது அல்லது சேதமடைவது போன்றவை ஏற்படலாம். இது மடாரோசிஸ் (Madarosis) எனப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Grape Seed Oil Benefits: சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவும் திராட்சை விதை எண்ணெய்.!

வீட்டு வைத்தியம்

இன்று பலரும் வலுவான, அடர்த்தியான புருவங்களைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கவலையுறுகின்றனர். இதற்கு உதவும் விதமாகவே புருவங்களுக்கு கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த கலவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், புருவம் மெலிந்து, வலுவிழந்து உதிர்வதைத் தடுக்க முடியும். அது மட்டுமில்லாமல், இந்த கலவை புருவங்களை அடர்த்தியாக மாற்றுகிறது.

அடர்த்தியான புருவம் வளர தேவையானவை

புருவங்கள் அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை உதவுகிறது. இவை எந்த வழியில் நன்மைகளைத் தருகிறது என்பது குறித்துக் காண்போம்.

முடி உதிர்வைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த இரண்டு பொருள்களும் பெரிதும் உதவுகிறது. இவை மயிர்க்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும், இவை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. கற்றாழை ஆனது முடி வளர்ச்சி மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு பொருள்களும் புருவங்களை அடர்த்தியாக மாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், இவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Jojoba Oil For Nails: நகங்கள் வேகமாக வளரணுமா.? இந்த ஒரு எண்ணெய் போதும்.

புருவத்திற்கு கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை

  • முதலில் பாத்திரம் ஒன்றில் 1-1 ஸ்பூன் என்ற கணக்கில் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இந்த கலவையை புருவங்களில் தடவி வட்ட இயக்கத்தில் நன்கு மசாஜ் செய்யலாம்.
  • இவ்வாறு செய்வது இந்த இரண்டு பொருள்களும் மயிர்க்கால்கள் வரை நன்கு உறிஞ்சப்படுகிறது.
  • இந்த முறையை இரவு தூங்கும் முன் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம்.
  • இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் புருவங்கள் அடர்த்தியாகவும், வலுவாகவும் வளர்வதைக் காணலாம்.

இந்த வழிகளில் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது, முடி வலுவடைந்து, முடி உதிர்வதைக் குறைக்கிறது. அடர்த்தியான மற்றும் வலுவான புருவங்களைப் பெற விரும்புபவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Figs Skin Benefits: அத்திப்பழத்தை இப்படி யூஸ் பண்ணா முகச்சுருக்கமே வராதாம்.

Image Source: Freepik

Read Next

பெண்கள் முகத்தில் ரேஸர் யூஸ் பண்ணலாமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க…

Disclaimer