Figs Skin Benefits: அத்திப்பழத்தை இப்படி யூஸ் பண்ணா முகச்சுருக்கமே வராதாம்.

  • SHARE
  • FOLLOW
Figs Skin Benefits: அத்திப்பழத்தை இப்படி யூஸ் பண்ணா முகச்சுருக்கமே வராதாம்.

ஏன் அத்திப்பழம்

சருமத்திற்கு அத்திப்பழங்கள் பல்வேறு வித நன்மைகளைத் தருகின்றன. இதில் அத்திப்பழம் வழங்கும் சரும ஆரோக்கியத்திற்கான நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

  • அத்திப்பழம் நீரேற்றமிக்கது என்பதால், சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இவை சருமத்தில் உள்ள நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது.
  • அத்திப்பழம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, உடல் அதிகளவு கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது இளமை மற்றும் உறுதியான தோற்றத்தினை அளிக்கிறது.
  • அத்திப்பழங்களை உட்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடுகள், புறஊதாக் கதிர்வீச்சு போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சின் தாக்குதலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதுடன், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Nail Care Tips: மழைக்காலத்துல நகப் பராமரிப்புக்கு இதெல்லாம் செய்யுங்க.

முகச்சுருக்கங்களை நிர்வகிக்க உதவும் அத்திப்பழத்தின் நன்மைகள்

அத்திப்பழங்களை உண்பது முகத்தின் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. எந்தெந்த வழிகளில் முகச்சுருக்கங்களைக் குறைக்க அத்திப்பழம் உதவுகிறது என்பது குறித்து காண்போம்.

இயற்கை மாய்ஸ்சரைசர்

அத்திப்பழம் இயற்கையாகவே அதிக நீர்ச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாகும். இவற்றை உட்கொள்ளும் போது அல்லது சருமத்தில் பயன்படுத்தும் போது மென்மையான மற்றும் சுருக்கமில்லாத சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும், இது சருமத்தில் தோன்றும் முதுமை அறிகுறிகளான நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே தினசரி உணவில் ஒரு பகுதியாக அத்திப்பழத்தைச் சேர்க்கலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

அத்திப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொள்வதன் மூலம் புற ஊதாக் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம். இவை சருமத்தை இளமையாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Eye Masks: கண் கருவளையம் சீக்கிரம் மறைய இந்த கண் மாஸ்க் பயன்படுத்துங்க.

சருமத்தைப் புதுப்பிக்க

அத்திப்பழத்தில் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலங்கள் (AHAs) மற்றும் இயற்கையான என்சமைகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை மெதுவாக உரித்து மீண்டும் புதுப்பிக்க உதவுகிறது. இவ்வாறு அத்திப்பழம் புத்துணர்ச்சியான மற்றும் மென்மையான சருமத்தை வெளிப்படுத்த உதவுகிறது. இதற்கு அத்திப்பழத்தை பிசைந்து அதில் சிறிது தேன் அல்லது தயிர் கலந்து எளிய ஸ்க்ரப்பை உருவாக்கலாம்.

கொலாஜன் தயாரிப்பில்

கொலாஜன் என்பது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மைய பராமரிக்கவும், சுருக்கங்களைத் தடுக்கவும் உதவும் முக்கிய புரதமாகும். இதில் கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. அத்திப்பழங்கள் நிறைந்த உணவுகள் உடலில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

அத்திப்பழத்தின் பைட்டோ நியூட்ரியன்ட் உள்ளடக்கம் காரணமாக, இவை அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றவும், சிவத்தலைக் குறைக்கவும் உதவும். அத்திப்பழத்தை உட்கொள்வது அல்லது அத்திப்பழத்தை அடிப்படையாகக் கொண்ட தோல் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவது, வீக்கத்தை எதிர்த்து சருமத்தை அமைதியாக மற்றும் இளமையாக வைக்க உதவுகிறது.

இந்த வழிகளில் அத்திப்பழம் தோல் ஆரோக்கிய நன்மைகளில் பங்கு வகிக்கிறது. அத்திப்பழத்தை பயன்படுத்தும் அதே வேளையில் தோல் பராமரிப்பின் முழுமையான செயல்முறையை நினைவில் கொள்வது அவசியமாகும். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நீரேற்றமாக இருப்பது, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்ற தோல் பராமரிப்பு வழக்கங்களைக் கையாள வேண்டும். இவை சுருக்கங்களைத் தடுக்கவும், இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beard Growth Oil: தாடி வேகமா வளர பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Pink Lips: உங்க உதடு கருப்பா இருக்கா? இளஞ்சிவப்பு உதட்டை பெற 1 துண்டு பீட்ரூட் போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்