Homemade Eye Masks: கண் கருவளையம் சீக்கிரம் மறைய இந்த கண் மாஸ்க் பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Homemade Eye Masks: கண் கருவளையம் சீக்கிரம் மறைய இந்த கண் மாஸ்க் பயன்படுத்துங்க.

தொடர்ச்சியான கணினி பயன்பாடு, மொபைல் போன்கள், கணினித் திரைகள் போன்றவை கண்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவை கண் சோர்வு, கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். மேலும் கண்களைச் சுற்றி, வீக்கம், வலி, கருவளையம் போன்றவை ஏற்படும். இதற்கு மன அழுத்தம், வயது முதிர்வு, ஒவ்வாமை, தூக்கமின்மை போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

கண் கருவளையங்களை நீக்க உதவும் கண் மாஸ்க்

கண்களைச் சுற்றி காணப்படும் கருவளையங்களை நீக்க உதவும் வீட்டிலேயே தயார் செய்யப்படும் சில கண் மாஸ்க்குகளைக் காண்போம்.

தேநீர் பைகள்

சில டீ வகைகளும் கண்களுக்கு முக மூடிகளாக செயல்பட்டு கண் பிரச்சனைக்குத் தீர்வு தருகின்றன. அதன் படி, பிளாக் டீ, கிரீன் டீ மற்றும் இன்னும் பல மூலிகை டீக்கள் போன்ற டீ பேக்குகள், கண்களின் கருமையை நீக்க உதவுகிறது. இதற்கு சில பயன்படுத்திய டீ பேக்குகளை சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். பின் 10 முதல் 15 நிமிடங்களுக்கு கண்களில் தேநீர் பைகளை ஈரப்படுத்த வேண்டும். இது கண்களைச் சுற்றியிருக்கும் வீக்கம் மற்றும் கருமையை நீக்க சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Best Nail Care Tips: நகம் அழகாக மற்றும் பாதுகாப்பாக இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோப் பண்ணுங்க..

ரோஸ் வாட்டர் கண் மாஸ்க்

கண் சோர்வை நீக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். தூய ரோஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதை காட்டன் பேட் ஒன்றின் உதவியுடன், கண்கள் மீது 15 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இது கண்களுக்கு இனிமையான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும், கண்களுக்குத் தளர்வை அளிக்கிறது. இதனுடன், கண்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் கண் மாஸ்க்

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்க, தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக அமையும். கண்களுக்கு கீழ் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கருவளையங்களை விரைவில் நீக்கும். எனவே கருவளையத்திலிருந்து விடுபட தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

பால் மற்றும் பேக்கிங் சோடா கண் மாஸ்க்

கண் சோர்வுக்கு பால் ஒரு சிறந்த தீர்வாகும். பால் மற்றும் பேக்கிங் சோடா கலவை கண் மாஸ்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 4 தேக்கரண்டி அளவு புதிய முழு பால் மற்றும் 2 தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மென்மையான மற்றும் கிரீமி நிலைத்தன்மையை அடைய நன்கு கலக்க வேண்டும். பின் இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, குளிர்ந்த முகமூடியை கண்களைச் சுற்றி பயன்படுத்தலாம்.

இவற்றை சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சிறிது நேரத்தில் கண்கள் புத்துயிர் பெற்று ஆரோக்கியமான நிலையை அடையும்.

இந்த பதிவும் உதவலாம்: Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

அன்னாச்சி மாஸ்க்

அன்னாச்சி மற்றும் மஞ்சள் தூள் இரண்டும் இயற்கையான தோல் பராமரிப்புப் பொருள்களாகச் செயல்படுகின்றன. கண் பைகள் மற்றும் கருவளையங்களுக்கு இந்த கலவை சிறந்த வீட்டு வைத்தியமாக செயல்படுகின்றன. இந்த பொருள்களைக் கலந்து இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும், கண்களுக்குக் கீழ் தடவி 30 நிமிடங்கள் வைக்க வேண்டு. இது எளிய மற்றும் சிறந்த பயனுள்ள தீர்வாக அமைகிறது.

வெள்ளரிக்காய் மாஸ்க்

இது மிகவும் பொதுவான கண் மாஸ்க் வகையாகும். வெள்ளரி குளிர்ச்சி பண்புகளைத் தரக்கூடியது. இந்த வெள்ளரிக்காய் மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்துவது, கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். இதற்கு வெள்ளரிக்காயை அரைத்து, குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

பாதாம் கண் மாஸ்க்

பாதாம் எண்ணெய் சருமத்திற்கு நீரேற்றம் தருவதாக அமைகின்றன. இது கண்களின் கருவலையங்களைப் போக்குவதுடன், சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. பாதாம் கண் மாஸ்க் ஆனது, பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த கலவையைத் தினமும் இரவில் தடவினால், கண்களில் கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இவை அனைத்தும், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் கண் சோர்வை நீக்க சிறந்த முறையாக உள்ளது. எனினும், ஒவ்வொருவருக்கும் சருமம் வெவ்வேறான பண்புகளைக் கொண்டிருப்பதால், சருமத்திற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் நிபுணர்கள் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்துவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Hand Wrinkles: கைகளின் சுருக்கத்தை நீக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

Image Source: Freepik

Read Next

Alum Benefits: படிகாரத்தின் அழகு ரகசியம் இது தான்!

Disclaimer

குறிச்சொற்கள்